india

img

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

தமிழகத்தில் முதல் எலெக்ட்ரிக் காரை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகம் செய்து வைத்துள்ளார். 
இந்தியாவில் 7000 கோடி மதிப்பீட்டிலும் தமிழகத்தில் 2000 கோடி மதிப்பீட்டிலும் எலெக்ட்ரிக் கார் தயாரிக்க கடந்த 3 மாதங்களுக்கு முன் ஹூண்டாய் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பெட்ரோல் டீசல் கார்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்தும் மாற்று ஏற்பாடாக எலெக்ட்ரிக் கார் தயாரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவின் முதல் முறையாக எலெக்ட்ரிக் காரை ஹூண்டாய் நிறுவனம் தயாரித்துள்ளது. கோனா காரின் ஆன் ரோடு மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும். இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 452 கிலோ மீட்டர் பயணம் செய்யலாம். இதில் 100 கி.மீ வேகத்தை 9.7 வினாடிகளில் கடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார்களுக்கான சார்ஜிங் ஸ்டேசன் அமைப்பதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தியாவின் பல இடங்களில் எலெக்ட்ரிக் கார்கள் இயங்கி வந்தாலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் எலெக்ட்ரிக் கார் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரில் ஓட்டுநருடன் சேர்த்து 5 பேர் பயணிக்க இயலும். இந்த காரை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகம் செய்து வைத்தார். 

;