india

img

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து - ஒன்றிய அரசு அனுமதி

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு, ஒன்றிய அரசு அவசரக்கால அனுமதி அளித்துள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம், மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா மருந்தை ஆய்வு செய்து வந்தது. இதை அடுத்து, ஆய்வு செய்த தரவுகளை சமர்ப்பித்து இந்த மருந்தினை பயன்பாட்டுக்குக் கொண்டுவர அனுமதி கோரி பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது.

இந்த நிலையில், தற்போது மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு, ஒன்றிய அரசு அவசரக்கால அனுமதி அளித்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்த மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 

;