குழந்தை திருமணங்களை தடுக்கும் வகையில் 2006ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின் கீழ் ஆணின் சராசரி திரு மண வயது 21 ஆக வும், பெண்ணின் சரா சரி திருமண வயது 18ஆகவும் நிர்ண யிக்கப்பட்டது.
இதனை மாற்றும் வகையில் கடந்த 2021இல் ஆண்களுக்கு நிகராக பெண்க ளுடைய திருமண வயதை 21 ஆக உயர்த்த ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கி யது. இதற்கு இடதுசாரிகள் உட்பட கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இன்னும் அமல்படுத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில் இமாச்சலப் பிரதேச அரசு பெண்களின் சராசரி திருமண வயதை 21ஆக அதிகரிக்கும் மசோதாவை ஒரு மனதாக நிறைவேற்றியுள்ளது.