india

img

கோடியைத் தொடும் 5ஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை!  

2021இல் மாதத்துக்கு 20 ஜிபியாக இருந்த மொபைல் டேட்டா பயன்பாடு 2027இல் 50 ஜிபியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இதுகுறித்து ஸ்வீடனைச் சோ்ந்த தொலைத்தொடா்பு நிறுவனமான எரிக்ஸன் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்தியாவில் வரும் 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 5ஜி சேவையை பயன்படுத்துவோா் எண்ணிக்கை 50 கோடியாக அதிகரிக்கும். இந்த எண்ணிக்கை நாட்டின் மொபைல் வாடிக்கையாளர்களில் 39 சதவிகிதம் ஆகும்.  

நாட்டில் அதிகரித்து வரும் ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கையுடன், நுகர்வோரின் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், 2021 இல் மாதத்துக்கு 20 ஜிபியாக இருந்த மொபைல் டேட்டா பயன்பாடு 2027 இல் 50 ஜிபியாக அதிகரிக்கலாம். இதற்கான ஆண்டு வளா்ச்சி விகிதம் 16 சதவீதமாக இருக்கும்.  

உலக அளவில் 2027 ஆம் ஆண்டுக்குள் 5ஜி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 440 கோடியைத் தொடும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகளவில் 5ஜி பயன்பாட்டில் வட அமெரிக்கா முன்னிலை வகிக்கும் என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கணக்கெடுப்பின்படி, 52 சதவீத நிறுவனங்கள் அடுத்த 12 மாதங்களுக்குள் 5ஜியை பயன்படுத்த தொடங்க விரும்புகின்றன. மற்றொரு 31 சதவீதம் பேர் 2024க்குள் 5ஜிக்கு மாறலாம் என கணித்துள்ளனர். அதே நேரத்தில் இந்த ஆண்டு 5ஜி பயன்படுத்துவோர் எண்ணிக்கை 1 பில்லியனை தாண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

;