india

img

ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்கொலை

கைதான 4 பேர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை

ஹைதராபாத்,டிச.6- ஹைதராபாத் பெண் மருத்துவரை பாலியல் வன்கொலை செய்து எரித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை செய்தனர். தெலுங்கானா மாநிலம், ஹைதரா பாத் புறநகரான சாம்ஷாபாத் பகுதி யைச் சேர்ந்தவர் பிரியங்கா (வயது27). கால்நடை மருத்துவராக பணி யாற்றி வந்தார். நவம்பர் 27 அன்று மருத்துவமனையில் பணியை முடித்து விட்டு இரவில் இருசக்கர வாகனத்தில்  வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார். சுங்கச்சாவடி அருகே  இவரது பைக் டயர் பஞ்சர் ஆனது. அப்போது 4 பேர் அவருக்கு உதவி செய்வதாக கூறி, பிரியங்காவை  கடத்திச் சென்றனர். பின் னர் வாயில் மதுவை ஊற்றி மயக்க மடைய செய்து கும்பலாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி, கழுத்தை நெரித்துக்கொன்றனர். பின்னர் அவ ரது உடலை அருகே உள்ள பாலத்துக்கு கீழே கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.

இச்சம்பவம் குறித்து அவரது பெற் றோர் அளித்த புகாரின் பேரில் லாரி ஓட்டுநர்களான முகமது பாஷா,  சென்னகேசவலு, மற்றும் கிளீனர் களான சிவா, நவீன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.  இச்சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வதில் தாமதம் செய்ததாக 3 போலீசார் சஸ் பெண்ட்  செய்யப்பட்டனர். கைது செய் யப்பட்ட  4 பேரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 4 பேரிடம்  7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்களிடம் போலீ சார் விசாரணை நடத்தி வந்தனர். வெள்ளியன்று அதிகாலை 3 மணி யளவில்  4 பேரையும் ஐதராபாத் போலீ சார், பெண் மருத்துவரை எரித்துக் கொன்ற ஹைதராபாத் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் எப்படி கொலை செய்தார்கள் என்பதை நடித்துக் காட்டினர். அப்போது 4 பேரும் திடீரென்று போலீசாரின் ஆயுதங்களை பறித்தும், கற்களால் தாக்கியும் தப்பி ஓட முயன்றதாகவும் போலீசார்  4 பேரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும், வெள்ளியன்று காலை போலீஸ் தரப்பில் பரபரப்புச் செய்தி வெளியிடப்பட்டது.

மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

 4 பேர் என்கவுண்ட்டர் விவகாரம் தொடர்பாக மீடியாவில் வெளியான தகவலை வைத்து, தாமாக முன்வந்து விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது.  மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று உண்மையை கண்டறியும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. எஸ்எஸ்பி தலைமையிலான இந்த  குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு  சென்று விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது.

;