india

img

பிளாஸ்டிக் குவளைக்கு மாற்றாக தானியங்களாலான குவளை அறிமுகம்

பிளாஸ்டிக் குவளைக்கு மாற்றாக தானியங்களால் தயாரிக்கப்பட்ட சாப்பிடக்கூடிய குவளையை ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்த ஜினோம்லேப் எனும் தனியார் நிறுவனம் தானியங்களால் தயாரிக்கப்பட்ட இந்த குவளைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கு 'ஈட் கப்' என்றும் பெயரிட்டுள்ளது. இதில், 40 நிமிடங்கள் வரை சூடான பானங்கள், குளிர்ந்த பானங்கள் இரண்டையும் ஊற்றிப் பயன்படுத்த முடியும். இந்த 'ஈட் கப்'பில் சூப், காபி, தேநீர், யோகர்ட், சுடுநீர் உள்ளிட்ட பானங்களைப் பருக முடியும். இந்த 'ஈட் கப்'பில் எந்தவிதமான செயற்கையான வண்ணங்களும், செயற்கையான பொருட்களும் சேர்க்கப்படாமல் முற்றிலும் தானியங்கள் மூலம் உருவாக்கி உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பது தவிர்க்கப்பட வேண்டும், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த 'ஈட் கப்' கொண்டுவரப்பட்டுள்ளதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

;