india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நிலமோசடி வழக்கு தொடர்பாக ஜாமீனில் வெளி வந்துள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜேஎம்எம் கட்சித் தலைவருமான ஹேமந்த் சோரன் சனியன்று பழங்குடி இனத்தின் பிதாமகன் பிர்சா முண்டாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அரசியல் நிகழ்வுகளை தொடங்கினார்.

லடாக்கில் ராணுவ டேங்க் ஆற்றைக் கடக்கும் போது நேரிட்ட விபத்தில் சிக்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

“பீகார் அரசுக்கு பாஜக தலைமை ஏற்க வேண் டும்” என அக்கட்சியின் மூத்த தலைவர் அஸ்வின் குமார் சவுபே தெரிவித்துள்ள கருத்தால், பீகார் பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற் பட்டுள்ளது.

“பயிற்சியின் போது ஆற்றில் மூழ்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது. நாடு அவர்களின் தியா கத்தை, அர்ப்பணிப்பை எப்போதும் நினைவில் கொள்ளும்” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் உச்சநீதி மன்றத்தில் புதிய மனு தாக்கலுக்கு மத்தியில் நாடு முழுவதும் நாளை (ஜூலை 1) 3 புதிய குற்ற வியல் சட்டங்கள் அமலுக்கு வருகிறது.

“முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி எங்களை எமர்ஜென்சி காலத்தில் சிறையில் போட்டி ருந்தாலும் கூட, எங்களை இந்திரா காந்தி துன்புறுத்தவில்லை” என ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் கூறியுள்ளார். 

பீகார் மாநிலத்தை ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் செயல் தலைவராக சஞ்சய் ஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

பாட்னா

பாலங்களில் பயணிக்க அஞ்சும் பீகார் மக்கள்  10 நாட்களில் 5 பாலங்கள் இடிந்து விழுந்தன

பாஜக ஆளும் பீகார் மாநி லத்தில் கடந்த 10 நாட்களாக பாலம் இடிந்து விழும் சம்ப வங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வரு கிறது. இந்நிலையில், மதுபானி மாவட்டத் தில் உள்ள பீஜா காவல் நிலையம் அருகே 75 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டு வரும் பாலம் ஒன்றும் இடிந்து விழுந்துள்ளது. ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த பாலம் திறக்கும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த சம்ப வத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளன. பாஜக கூட்டணி ஆளும் பீகாரில் ஊழல் தலைவிரித்தாடு வதால் பாலங்களில் பயணிக்க பீகார் மக்கள் அஞ்சுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

பாலங்களும்...10 நாட்களும்... 

1. ஜூன் 18 - அராரியா மாவட்டத்தில் ரூ. 12 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 180 மீட்டர நீளமுள்ள பாலம் இடிந்து விழுந்தது.

2. ஜூன் 22 - சிவான் மாவட்டத்தின் முக்கியபாலம் ஒன்று இடிந்து விழுந்தது.

3.ஜூன் 23 - கிழக்கு சம்பாரண் மாவட்டம் கோரசஹான் பகுதியில் உள்ள பாலம் இடிந்து விழுந்தது.

4. ஜூன் 27 - கிஷன்கஞ்ச் மாவட்டம் பான்ஸ்பரி ஷ்ரவன் சௌக் அருகேமரியா ஆற்றின் குறிக்கே ஆற்றுப்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

நீட் முறைகேடுகுஜராத்தில்சிபிஐ விசாரணை

நீட் வினாத்தாள் முறைகேட்டில் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் பல ருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் கசிந்த நிலையில், கோத்ராவில் இது வரை  5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் கோத்ரா போலீசார் சந்தே கத்தின் அடிப்படையில் தான் கைது செய்துள்ளதாகவும், அவர்கள் மீது இன்னும் குற்றச்சாட்டு எதுவும் நிரூ பிக்கப்படவில்லை எனவும் கூறினார். 

தற்போது நீட் தேர்வு முறைகேடு விவகாரம் சிபிஐ கைக்கு சென்றுள்ள நிலையில், பாஜக ஆளும் குஜராத் மாநி லத்தின் முக்கிய நகரங்கள் சிபிஐ விசாரணை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. சனியன்று குஜராத் மாநிலத்தின் 7 இடங்களில் சிபிஐ அதி காரிகள் தொடர் சோதனை நடத்திய நிலை யில், கோத்ராவில் நீட் வினாத்தாள் விற் கப்பட்டதை சிபிஐ அதிகாரிகள் உறுதி செய்தனர்.

ஜார்க்கண்டில்  பள்ளி முதல்வர் கைது

நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட தாக ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரி பாக் ஒயாஸிஸ் பள்ளியின் முதல்வரும், நீட் தேர்வு ஒருங்கிணைப்பாளருமான அஹ்ஸலனுக் ஹக், பள்ளியின் துணை முதல்வரும், நீட் தேர்வு கண்காணிப்பா ளருமான இம்தியாஸ் ஆலம் ஆகி யோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்த னர். இதே போல் இந்தி செய்தி நிறுவ னத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர் ஜமாலுதீனையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக ஜார்க்கண்டில் இதுவரை 8 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

புதுதில்லி 
கெஜ்ரிவாலுக்குஜூலை 12 வரைநீதிமன்றக் காவல்

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வால் மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை யால் கைது செய்யப்பட்டு தில்லி திகார்  சிறையில் உள்ள நிலையில், புதனன்று காலை அதே மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப் பும் (சிபிஐ) கைது செய்தது. கைது செய்த பின் 5 நாட்கள் காவல் கோரி தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிபிஐ கெஜ்ரி வாலை ஆஜர்படுத்திய நிலையில், ரோஸ் அவென்யூ நீதிமன்ற நீதிபதிகள் 3 நாட்கள் சிபிஐ காவல் அளித்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில், 3 நாட்கள் சிபிஐ காவல் நிறைவடைந்ததை அடுத்து சனி யன்று தில்லி ரோஸ் அவென்யூ நீதி மன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை ஆஜர்படுத்தியது சிபிஐ. இருதரப்பு வாதங்களுக்கு பிறகு அரவிந்த் கெஜ்ரி வாலுக்கு ஜூலை 12 வரை நீதிமன்றக் காவல் வழங்கப்படுவதாக ரோஸ் அவென்யூ நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.




 

;