india

img

3வது அலை வருவதற்கு முன்பே 50 சதவிகித குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு : எய்ம்ஸ் தகவல்

இந்தியாவில் 50 சதவிகித குழந்தைகள் ஏற்கனவே கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை குழந்தைகளை அதிகமாகத் தாக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ள நிலையில், கடந்த 10 நாட்களில் மட்டும் பெங்களூருவில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நாடு முழுவதும் 50 சதவிகித குழந்தைகளுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக எய்ம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா கூறுகையில், நாட்டில் மூன்றாவது அலை ஏற்பட்டால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி இதுவரை செலுத்தப்படாமல் உள்ளது. அண்மையில் நடத்திய ஆய்வு ஒன்றில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான குழந்தைகள் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை இப்போது ஏற்பட வாய்ப்பு இல்லை. இருந்தாலும் மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றவில்லை என்றால் மூன்றாவது அலை ஏற்படலாம் எனக் கூறினார். 

;