india

img

விவசாயிகள் என்றாலே ஆவதில்லை... மோடி அரசுக்கு புதுவகை நோய்..

புதுதில்லி:
ஹரியானா விவசாயிகள் நடத்திய நவம்பர் 26 ‘தில்லி சலோ’ பேரணி மீது பாஜகஅரசு நடத்திய தடியடி தாக்குதலுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பேரணியில் பங்கேற்றவரும் ‘ஸ்வராஜ் இந்தியா’ அமைப்பின் தலைவருமான யோகேந்திர யாதவும் காட்டமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

‘தில்லி சலோ’ பேரணியைத் தடுப்பதற்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகள்தான் காரணம் என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். அப்படியானால், அந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் போது  ஏன் பின்பற்றப்படவில்லை? மூன்று நாட்களுக்கு முன்னதாக ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா பேரணி நடத்தினார். ஆயிரக்கணக்கானவர்கள் முகக்கவசம் அணியாமல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் திரண்டனர். அப்போதெல்லாம் தொற்று பரவவில்லையா?தில்லி சலோ பேரணியில் விவசாயிகள் திரண்டால் மட்டும் தொற்று பரவிவிடுமா? அப்படியானால் அது புதுவிதமான தொற்றாக இருக்கிறதே? ஏன், இதனை புதுவகை நோய் என்றுகூட சொல்லலாம். இவ்வாறு யோகேந்திர யாதவ் கூறியுள்ளார்.

;