உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, எஸ்பிஐ அளித்த தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி ஆகிய மூன்று மதிப்புள்ள பத்திரங்களை வாங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் விவரங்கள் இடம்பெற்றிருந்தன.
தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகபட்சமாக நன்கொடை வாங்கிய கட்சிகளில், ரூ.6,060 கோடியை நன்கொடையாக பெற்று பாஜக முதலிடத்தில் உள்ளது; திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ரூ.1,609 கோடியும், காங்கிரஸ் கட்சி ரூ.1,421 கோடியும், பாரத் ராஷ்ட்ர சமிதி ரூ.1,215 கோடியும், பிஜு ஜனதா தள் ரூ.7,76 கோடியும், திமுக ரூ.6,39 கோடியும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ரூ.3,37 கோடியும், சிவசேனா கட்சி ரூ.1,58 கோடியும், ராஷ்டிய ஜனதா தள் ரூ.73 கோடியும், ஆம் ஆத்மி கட்சி ரூ.65 கோடியும், ஜனதா தளம் ரூ.44 கோடியும் நன்கொடை பெற்றுள்ளன.
தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடை அளித்த முதல் 10 இடங்களில் இருக்கும் நிறுவனங்களின் விவரம்:
ஃபியூசர் கேமிங் & ஹோட்டல் சர்வீஸ் (FUTURE GAMING AND HOTEL SERVICES PR) - ரூ.1,368 கோடி
மேகா இஞ்சினியரிங் & இன்ஃப்ராஸ்ரக்சர்ஸ் லிமிடட் (MEGHA ENGINEERING AND INFRASTRUCTURES LIMITED) - ரூ.966 கோடி
குயிக் சப்ளை செயின் பிரைவேட் மிலிடட் (QWIK SUPPLY CHAIN PRIVATE LIMITED) - ரூ.410 கோடி
ஹல்டியா எனர்ஜி லிமிடட் (HALDIA ENERGY LIMITED) - ரூ.377 கோடி
வேதாந்தா லிமிடட் (VEDANTA LIMITED) - ரூ.376 கோடி
எஸ்ஸெல் மைனிங்க் & இண்டஸ்ட்ரீஸ் லிமிடட் (ESSEL MINING AND INDS LTD) - ரூ.225 கோடி
வெஸ்டர்ன் யுபி பவர் ட்ரான்ஸ்மீஷன் (WESTERN UP POWER TRANSMISSION COMPANY LIMITED) - ரூ.220 கோடி
கெவெண்டர் ஃபுட்பார்க் இன்ஃப்ரா (KEVENTER FOODPARK INFRA LIMITED) - ரூ.195 கோடி
மதன்லால் லிமிட் (MADANLAL LTD) - ரூ.186 கோடி
பாரதி ஏர்டெல் லிமிடட் (BHARTI AIRTEL LIMITED) - ரூ.183 கோடி