india

2020-21 கொரோனா காலகட்டத்தில் நாடு முழுவதும் 20 ஆயிரம் பள்ளிகள் மூடல்!

புதுதில்லி, நவ. 4 - 2021-22 கொரோனா கால கட்டத்தில், நாடு முழுவதும் 20 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றிய அரசின் கல்வி அமைச்ச கம் இத்தகவலை வெளி யிட்டுள்ளது. ஆசிரியர்களின் எண்ணிக்கையும் இந்த காலகட்டத்தில் 1.95 சத விகிதம் சரிந்துள்ளது. ஒன்றிய கல்வி அமைச்ச கமானது கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (UDISE+) என்ற அறிக்கையை வெளி யிட்டுள்ளது. இது 2021-22 காலகட்டத்தில் இந்தியா வில் பள்ளிக் கல்வியின் நிலை பற்றிய அறிக்கையாக அமைந்துள்ளது. அந்த அறிக்கையில் தான் நாடு முழுவதும் 2021-22 காலகட்டத்தில் 20 ஆயிரம் பள்ளிகள் மூடப் பட்டுள்ளதாக கூறப்பட்டுள் ளது.  2020-21 காலகட்டத்தில் நாடு முழுவதும் 15.09 லட்சம் பள்ளிகள் இருந்த நிலையில், 2021-22இல் இந்த எண்ணிக்கை 14.89 லட்சமாக குறைந்துள்ளது.

இந்த சரிவுக்கு முக்கிய கார ணம், தனியார் மற்றும் மே னேஜ்மென்ட் பள்ளிகள் குறிப்பிடத்தக்க எண்ணிக் கையில் மூடப்பட்டதே என்று அறிக்கை தெரிவிக் கின்றது. கொரோனா பெருந் தொற்று தாக்கத்தால் பள்ளி களில் மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட்டதாகவும் அதிலும் குறிப்பாக மழலையர் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக பாதிக் கப்பட்டதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது. கோவிட் தொற்று கார ணமாக பள்ளிகளில் மாண வர் சேர்க்கை ஒத்திவைக்கப் பட்டதாலும் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது என்று விளக் கப்பட்டுள்ளது.  இதேபோல ஆசிரியர்க ளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. 2020-21 காலகட்டத்தில் ஆசிரியர் கள் எண்ணிக்கை 97.87 லட்ச மாக இருந்தது. இது 2021-22இல் 95.07 லட்சமாக குறைந்துள்ளது. அதாவது 1.95 சதவிகிதம் சரிந்துள்ளது. தொடக்கப்பள்ளி ஆசிரி யர்களின் எண்ணிக்கை 2020-21-இல் 35.4 சதவிகிதமாக இருந்தது, 2021-22ல் 34.4 சதவிகிதமாகக் குறைந் துள்ளது. உயர்நிலைப் பள்ளி யில் கற்பிக்கும் ஆசிரியர்க ளின் எண்ணிக்கை 2020-21ல் 21.5 சதவிகிதமாக இருந்தது, 2021-22ல் 18.9 சத விகிதமாக குறைந்து உள்ளது. இந்த சரிவு, அரசுப் பள்ளி ஆசிரியர்களில் 0.9 சதவிகிதமாகவும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1.45 சதவிகிதமாகவும், தனி யார் பள்ளிகளில் 2.94 சத விகிதமாகவும் இதர பள்ளிக ளில் 8.3 சதவிகிதமாகவும் உள்ளது.

;