india

இந்திய சட்டத்துறை செயலாளராக தில்லி மாவட்ட நீதிபதி

புதுதில்லி:
இந்திய சட்டத்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக, பணியில் இருக்கும் மாவட்ட நீதிபதி ஒருவர் துறைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அனூப் குமார் மெந்திரட்டா என்ற அந்த நீதிபதி, தில்லி நீதித்துறை சேவைபணியில் இருப்பவர்.தில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கும், பிரதமர்நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும் இடையே அதிகாரம் செலுத்துவது தொடர்பாக நிலவும் போட்டியில், மத்திய அரசுக்குசாதகமான நிலையை மெந்திரட்டா எடுத்ததாக கன்னையகுமார் வழக்கு சர்ச்சையின்போது பேசப்பட்டது. இந்தப் பின்னணியில் அவரது சேவையை இந்திய அரசு பெற விரும்புவதன் மூலம், அவரது சட்டத்துறை செயலாளர் பணியின் நடவடிக்கைகள் இந்திய அரசுவட்டாரத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

;