india

img

எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வரை முடக்கிய ஹேக்கர்கள் ரூ.200 கோடி கேட்டு மிரட்டல்

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வரை விடுவிக்க, கிரிப்டோகரன்சியில் ரூ.200 கோடி கொடுக்க வேண்டும் என்று ஹேக்கர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வர் கடந்த நவம்பர் 23-ஆம் தேதி ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. இதனால் நோயாளிகள் வருகை உட்பட அனைத்தும் தற்போது நோட்டு புத்தகங்களில் எழுதப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறன. கடந்த நவ.25-ஆம், இது தொடர்பாக சைபர் க்ரைமில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சர்வரை விடுவிக்க கிரிப்டோகரன்சியில் ரூ.200 கோடி கொடுக்க வேண்டும் என்று ஹேக்கர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். 
இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகளின் தரவுகளை பேக்கப் எடுத்து வைத்துக்கொள்ளும்படி தில்லி எய்ம்ஸ் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

;