india

img

காங்கிரஸில் டேனிஷ் அலி?

நாடாளுமன்றத்தில் பேச லஞ்சம் பெற்றதாக திரிணாமுல் காங்கி ரஸ் கட்சியின் மூத்த தலைவர் மஹுவா மொய்த் ராவின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. இதற்கு “இந்தியா” கூட்டணி கட்சி எம்பிக்  கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடாளு மன்றத்தில் கடும்  அமளியில் ஈடுபட்ட னர். தொடர்ந்து நாடாளுமன்ற வளா கத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்  டம் நடத்தினர். மஹுவா மொய்த்ராவிற்கு ஆதரவாக நடைபெற்ற அனைத்து நிகழ்வு களிலும் பகுஜன் சமாஜ் எம்பி குன்வார்  டேனிஷ் அலி பங்கேற்றார். இந்நிலை யில், சனியன்று மஹுவா மொய்த்ரா விவ காரத்தில் கட்சியின் கொள்கைகளுக்கு  எதிராக செயல்பட்டதாக கூறி டேனிஷ்  அலி கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து  உத்தரவிட்டார் பகுஜன் சமாஜி கட்சி யின் பொதுச்செயலாளர் சதீஷ் சந்திர  மிஸ்ரா. இந்த விவகாரம் தொடர்பாக டேனிஷ் அலி எவ்வித கருத்தும் தெரி விக்காத நிலையில், அவர் விரைவில்  காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது. தேவ ஜகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் முன்னணி தலைவராக இருந்த உத்தரப்பிரதேசத்தின் டேனிஷ் அலி,  கடந்த 2019இல் அக்கட்சியில் இருந்து  விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்  தார். அதே ஆண்டு நடைபெற்ற மக்கள வைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி அம்ரோஹா தொகுதியில் போட்டியிட  வாய்ப்பு அளித்து டேனிஷ் அலியை நாடா ளுமன்றத்திற்கு அனுப்பியது என்பது குறிப் பிடத்தக்கது.