இந்தியா சமீபமாக ஒரு புது சகாப்தத்தில் நுழைகிறது. இந்திய நகரங்களில் இந்த ஆண்டு ராமநவமியின் போது கலகங்கள் ஏற்படுத்தப்பட்டன. தெருக்களில் கிரிமினல்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன மற்றும் அநேக பொதுமக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயப்படுத்தப் பட்டனர். காவல்துறையினர் அத்தகைய கலகத்தை தடுத்திருக்க வேண்டும். கலகத்தில் ஈடுபட்டவர் களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். சட்டத்தின் முன் விஷமிகளின் நம்பிக்கை இனம், சாதி ஆகியவை ஒரு பொருட்டல்ல. எவரேனும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினால் அது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் தேசத்திற்கான இழப்பீட்டை வசூல் செய்வதற்கான உரிய நடை முறை உள்ளது. அதில் யாருக்கும் எந்த மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது.
சமீபத்தில் டெல்லியில் இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் பாஜக தலைமையிலான நகராட்சி நிர்வாகம் ஜேசிபி அனுப்பி நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி கட்டடங்களை இடித்துத் தள்ளியதையும் அந்த ஜேசிபியின் முன்நின்று உச்ச நீதிமன்ற உத்தரவை காட்டி சிபிஐஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரத் அவர்கள் இடிப்பை தடுத்து நிறுத்திய பின்னணியில் எழுதப்பட்ட கட்டுரை. |
எனினும் வெட்கங்கெட்ட முறையில் தன்னைத் தானே விளம்பரப்படுத்திக் கொள்ளும் நோக் கத்தில் நோக்கத்தில் சில மாநில அரசுகள் நீதிபதி களாக மாறி தனது நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களை குறிவைத்து தாக்கினார்கள். ஒருவர் கண்டறிந்தார் என புகார் வந்தால் அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டையோ அல்லது வியாபார நிறுவனத்தையோ இடித்து தரைமட்டமாக்கி இருக்கின்றனர் விசா ரணை இல்லை. எச்சரிக்கை நோட்டீஸ் இல்லை. சட்ட நடைமுறை இல்லை. கைதட்டி கும்மாளமிடும் ஒரு கூட்டத்தை திருப்திப்படுத்த காட்டுமிராண்டித் தனமாக தனது அதிகாரத்தை காட்டுகிறது புல்டோசர். மாமா, பாபா, அண்ணா போன்ற பெயர்களை பெறுவதற்காக சில மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள் போட்டி போட்டுக் கொண்டு இவ்வாறு செயல்படுகிறார்கள் இத்தகைய நட வடிக்கை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே இடித்து தரைமட்டமாக்கியது என்பதை உணரா மல் வரவேற்கின்றனர் கலகம் செய்வது கடுமை யான குற்றம் கொலை கற்பழிப்பு தாக்குதல் போன்ற மற்றவைகளும் அதுபோன்ற குற்றமே. இது போன்ற குற்றங்களுக்கும் வருங்காலத்தில் மேற் குறிப்பிட்டபடி அதிரடி தண்டனை வழங்கப்படுமா என்ற கேள்வி இயற்கையாகவே எழுகிறது.
எங்கேனும் யாரேனும் ஒருவர் ஒரு குற்றச் செயலில் ஈடுபட்டால் ஒரு புல்டோசரை அனுப்பி அவரது வீடு இடிக்கப்படுமா கூட்டு குடும்பத்தில் உள்ள ஒருவர் ஒரு குற்றம் இழைத்துவிட்டால் ஒரு புல்டோசர் அனுப்பப்பட்டு கூட்டுக் குடும்பம் முழுமைக்கும் சொந்தமான வீடு எந்தவித விசார ணையோ முன்னெச்சரிக்கையும் இன்றியோ இடித்து தள்ளப்படும். குற்றச் செயலில் குடும்ப உறுப்பினர் ஒருவர் ஈடுபட்டால் அவர் மட்டுமே தண்டிக்கப்பட வேண்டியவர் ஆனால் சிறு குழந்தை கள் உள்ளிட்ட அவரது மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வாறு பொறுப்பாவார்கள்? அவர்கள் அவர்களை வீடற்றவர்கள் ஆக்கு வது எந்த வகையில் நியாயம் கட்டடங்களை தரை மட்டமாக்க எந்த சட்டம் அனுமதிக்கிறது? குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதி என நீதிமன்றத்தில் பின்னர் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். அதிகாரிகள் தங்கள் ஊதியத்தி லிருந்து அந்த இழப்பீட்டை தருவார்களா? குற்றச் செயலில் ஈடுபடுபவர்கள் மத்தியில் ஒரு பயத்தை உருவாக்கவே இந்த புல்டோசர் தீர்ப்புகள் வழங்கப்படுவதாக தற்போது நடந்த இத்தகைய நிகழ்வில் ஈடுபட்ட ஒரு மாநகர ஆணை யாளர் கூறுகிறார்.
வேறு வார்த்தைகளில் சொல்வ தானால், இது அரசின் ஆதரவுடன் நடந்த ஒரு பய முறுத்தல் நடவடிக்கையாகும். ஆனால் பொதுச் சொத்துக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உள்ளதாக மற்றொரு சமாதானம் கூறப்படுகிறது கட்டடங்களை இடித்தல் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வாறு சரி செய்யப்படும் என்பதை அந்த வாதம் விளக்கவில்லை. அரசு, பொதுச் சொத்துக்கு ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய வேண்டுமெனில் சட்டத்திற்குட்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் முதலில் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு இழப்பின் அளவு தீர்மானிக்கப்பட வேண்டும் அதன் பின்னரே நீதிமன்ற உத்தரவுப்படி சேதத்தை சரிசெய்யவேண்டும் கட்டடங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் இருப்பினும் அது ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் உள்ளது என்பது நிரூபிக்கப்பட வேண்டும் இந்த நிகழ்வுகளின் போது நீதிமன்றங்கள் அமைதி காப்பது என்பது பிரமிக்கத்தக்கது. இத்தகைய இடிப்புகளை நிறைவேற்றுவதற்கு தங்களது அரசியல் எஜமானர்களின் உத்தரவை எந்த ஒரு அதிகாரியும் எதிர்த்து கேட்கவில்லை என்பது ஒரு வருத்தம் அளிக்கும் அம்சமாகும் நீதித்துறை மற்றும் அரசுத்துறை போன்ற ஜனநாயகத்தின் தூண்கள் தாக்கப்படுவதை நாம் காண நேர்கிறது இந்த நிலை நீடித்தால் நீதிமன்றங்களையும் காவல் நிலையங்களையும் கலைத்துவிட்டு ஒவ்வொரு நகரத்திலும் சில புல்டோசர்களை வைத்திருந்தால் போதும் அது மக்களை பயமுறுத்தி குற்றத்தில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்திவிடும்.
உதாரணமாக கார் அல்லது ஸ்கூட்டரில் செல்லும் ஒருவர் சாலை விதியை மீறினால் உடனடியாக ஒருவரை அனுப்பி அந்த கார் அல்லது ஸ்கூட்டரை உடைத்து தூள் தூளாக்கி விடலாம். அடுத்தபடியாக அந்த ஓட்டுநரை சுட்டு விடலாம் இது சர்வாதிகாரம் என்று தோன்றினால் ஆம் இங்கு நடப்பது சர்வாதிகாரம் தான். சிலருக்கு சாதாரண மக்களின் வீடுகளும் வாழ்வாதாரமும் தாக்கப்படுவதை காண்பது ஒரு பொழுதுபோக்காக இருக்கலாம் ஆனால் எண்ணற்ற வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தள பதிவுகள் உருவாக்கியுள்ள வகுப்பு வாதத்தின் காரணமாக நம்மில் பலர் நீதியும் மனிதாபிமான மும் அகற்றப் படுவதை கண்டும் காணாமல் இருக்கிறோம் என்பது ஒரு துரதிர்ஷ்டம். அனைத்து மாநிலங்களிலும் உள்ள அவர்களின் வீடுகளுக்கு ஒரு புல்டோசரை எடுத்துச் சென்றால் எவ்வாறு இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள் நமது நாட்டையும் ஜனநாயகத்தையும் காக்க நமது நீதிமன்றங்கள் தங்களது நீண்ட உறக்கத்திலிருந்து விரைவில் விழித்தெழ வேண்டும்
நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (8-5-22) தமிழில்: ஈரோடு என் ராமசாமி