india

img

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தாக்கியது. இந்த வைரஸ் தொற்று உலகின் 110 நாடுகளுக்கு பரவி உள்ளது. இந்த நோய் தொற்று காரணமாக இதுவரை 3,830 பேர் பலியாகி உள்ளனர். 1,10,000 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகள் பெரும் பாதிப்பு காணப்படுகிறது.

இந்த சூழலில், இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை 39 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டனர். இதில் 16 பேர் இத்தாலி நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆவார்கள். கேரளாவில் நேற்று 5 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பத்தனம் திட்டாவில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இத்தாலி சென்று விட்டு திரும்பினார்கள். அவர்களோடு அவர்களது உறவினர்கள் 2 பேருக்கும் இந்த வைரஸ் தாக்கி இருந்தது.

இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு மேலும் 4 பேர் பாதிக்கப்பட்டு இருப்பது இன்று உறுதியானது.  ஜம்முவைச் சேர்ந்த 63 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் சமீபத்தில் ஈரான் சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.டெல்லியில் ஏற்கனவே 2 பேர் பாதிப்புக்குள்ளாகி இருந்தார்கள். தற்போது இது மூன்றாவதாக ஒருவருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதே போல், உத்தரப்பிரதேச மாநிலத்திலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல் கேரளா மாநிலத்தில், சிறுமி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.


 

;