“மதச்சார்பி ன்மை என்பது ஓர் அரசியல் கோட்பாடு - அர சியலின் சுற்றுப் பாதையில் இருந்து மதத்தை விலக்கி வைக்க வேண்டும் என்பதே அதன் பொருள்” எனப் பேராசிரியர் அகில் பில்கிராமி (கொலம்பியா பல்கலைக்கழகம்) கடந்த ஜனவரி 5 அன்று சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசியிருக்கிறார். ஆனால், ஒன்றிய அரசோ இக்கோட்பாட்டிற்கு நேர்விரோத மாக இயங்கி வருகிறது. இந்திய அரசியல் சட்டத்தினுடைய முக்கியமான விழுமியங்களில் ஒன்றான மதச்சார்பின்மையை அழித்திடும் முயற்சியில் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது.
இப்பின்னணி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதச்சார்பின்மை யை பாதுகாக்க வேண்டுமென உரத்துக் குரல் எழுப்பி வருகிறது. அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அறக்கட்ட ளையின் சார்பில் அனைத்து அரசியல் கட்சி களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. எதற்காக இந்த முயற்சி? ராமர் கோவில் திறப்பு விழாவில் ஒரு கட்சி கலந்து கொள்ளவில்லை என்றால் அக்கட்சி இந்துக்களுக்கு விரோத மானது என மக்கள் மத்தியில் அவதூறு பரப்பி நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக பாஜக கடைப்பிடிக்கும் மலிவான உத்தி இது. 30.12.2023 அன்று அயோத்தியில் பிரதமர் மோடி பேசும்போது, “வளர்ச்சியடைந்த இந்தியா என்ற முழக்கத்திற்கு அயோத்தி புதிய உத்வேகத்தை அளிக்கிறது” என்றார்.
சங் பரிவார் கும்பலால் திட்டமிட்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கோவில் கட்டுவதுதான் இந்திய வளர்ச்சிக்கு அளவு கோலா? விலைவாசி, வேலையின்மை, ஊழல், ஜன நாயக உரிமைகள் பறிப்பு என மோடி ஆட்சி யின் பத்தாண்டுகால இந்தியாவை படு பாதாளத்தில் தள்ளியது. இதை மூடி மறைக்கத் தான் அயோத்தி கோவிலை குறுகிய அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்துகிறது மோடி அரசு.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டும் நிலைபாடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களுக்கு அறக்கட்டளையின் சார்பில் நேரில் வந்து அழைப்பிதழை அளித்துள்ளனர். இதுகுறித்து அவர் கீழ்க்கண்ட வாறு குறிப்பிட்டுள்ளார் “ஒரு மதக் கொண்டாட்டத்தில், பிரதமர், உத்தரப்பிரதேச முதலமைச்சர் மற்றும் இதர அரசு அதிகாரிகள் நேரடியாகவே சம்மந்தப்பட்டு அதனை ஓர் அரசு நிகழ்ச்சியாக ஆர்எஸ்எஸ்/பாஜக மாற்றியிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமாகும்”. “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை என்பது மத நம்பிக்கைகளை மதித்திட வேண்டும் என்பதும், ஒவ்வொரு தனி நபருக்கும் அவர்தம் மத நம்பிக்கைகளைப் பின்பற்றிட உள்ள உரிமையைப் பாதுகாத்திட வேண்டும் என்பதுமாகும்.
மதம் என்பது ஒரு நபரின் தனிப்பட்ட தேர்வு என்றும், அதனை அரசியல் ஆதாயத்திற்கான ஒரு கருவியாக மாற்றக் கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்புகிறது. எனவே, இந்த நிகழ்வில் நாங்கள் பங்கேற்கமாட்டோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “உச்சநீதிமன்றம் திரும்பத் திரும்ப வலியுறுத்தியுள்ளது போன்று, இந்தியாவில் ஆட்சி அதிகாரத்தின் அடிப்படைக் கொள்கை, இந்தியாவில் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அமைந்துள்ள அரசு, எவ்விதமான மதத்தையும் சார்ந்து இருக்கக் கூடாது.
இது ஆளும் தரப்பினரால் இந்த நிகழ்வில் மீறப்பட்டுக் கொண்டிருக்கிறது” என்பதை சுட்டிக்காட்டி மதச்சார்பின்மை கோட்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உயர்த்திப் பிடிக்கிறது. ஜனவரி 22- ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க வேண்டும் என்பதற்காக ராமர் கோவில் கட்டும் பணி அவசரகோலத்தில் நடந்து வருகிறது.
இதுவரை இந்தியாவில் எந்தவொரு நகரத்திற்கும் இல்லாத முக்கியத்துவத்தை அயோத்திக்கு வழங்கி, 2034 அயோத்தியா மாஸ்டர் பிளான் திட்டம், 2047 விஷன் அயோத்தியா திட்டம் என்ற இரு மெகா திட்டங்களை வகுத்து, மொத்தம் 34 ஏஜென்சிகள் மூலம், 80,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டுமானத் திட்டங்கள் அயோத்தி யில் தொடங்கப்பட்டு வேலைகள் நடந்து வருகின்றன; இந்த 80,000 கோடி ரூபாயில் பெரும்பகுதி ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது என இந்து நாளிதழ் தெரிவிக்கிறது. பாபர் மசூதி இடிப்பு குறித்த பல பத்தாண்டு களாக நடந்து வந்த வழக்குகளின் இறுதித் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 2019-நவம்பரில் வழங்கியது.
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டும் பணிக்காக ஒரு அறக்கட்டளையை அரசே உருவாக்கிட வேண்டும் என்ற விநோத மான, ஏற்றுக் கொள்ள முடியாத தீர்ப்பை அன்றைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், ஏ.எஸ்.பாப்டே, சந்திரசூட், அசோக் பூஷன், எஸ்.அப்துல் நசீர் கொண்ட அமர்வு வழங்கியது. மதச்சார்பற்ற தன்மையை அரசு பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டிய உச்சநீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பு இந்தியாவின் அரசியல், சமூக வரலாற்றை மாற்றியமைக்கப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.
இன்றைக்கு 2024 ஆம் ஆண்டில் அயோத்தி கோவிலைத் திறந்து வைப்பதற்காக மதச்சார்பற்ற நாட்டின் பிரதமரான ஆர்.எஸ்.எஸ் காரர் நரேந்திர மோடி தயாராகிக் கொண்டிருக்கிறார். மதச்சார்பற்ற இந்திய நாட்டின் ஒன்றிய அரசு அயோத்தியா வின் நிர்மாணத்திற்கு 80,000 கோடி செல வழிக்கிறது. உலகின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து போவதற்கான இந்துத்துவ சுற்றுலாத்தளமாக அயோத்தி மாற்றப்பட்டு வருகிறது.
தகர்க்கப்படும் அரசியல் சட்டம்
இந்தியா மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு நாடு என அரசியலமைப்புச் சட்டத்தால் பிரகடனப்படுத்தப்பட்டு 74 ஆண்டுகள் ஆகி விட்டன. இந்தியாவை இந்து ராஷ்டிர நாடாக்க வேண்டும் என்ற திட்டம் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு தொடக்கம் முதலே இருந்து வருகிறது.
அந்த இந்துராஷ்டிரத் திட்டத்தை நிறைவேற்று வதற்காக வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிற களத்திட்டம்தான் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் திட்டம். இந்தத் திட்டத்தை 1949 டிசம்பர் 22 தொடங்கி 2024 ஜனவரி 22 வரை நீதித்துறை உள்ளிட்டு அரசு இயந்திரத்திற்குள் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவி படிப்படியாக செயல்படுத்தி வருகிறது.
இந்திய அரசு மதத்தில் இருந்து விலகி இருக்கும் என்ற இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை நொறுக்கும் திட்ட மாக இன்றைக்கு பாஜகவால் அயோத்தி ராமர்கோவில் திட்டம் முன்னிறுத்தப்படுகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் நீண்ட கால அஜெண்டாவான மத அடிப்படையிலான அரசை உருவாக்குவதற்கு ஒன்றிய அரசும் பாஜக தலைமையும் முயற்சித்து வருகிறது. மதத்தின் அடிப்படையில் தலிபான் ஆட்சி நடத்தி வரும் ஆப்கானிஸ்தான் நாட்டை இதற்கு ஒரு உதாரணமாகக் கொள்ள முடியும்.
மதத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் நாடு உரு வாக்கப்பட்டது. ஆனால், கிழக்கு பாகிஸ்தான் பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்காளதேசமாக உருவானது. மதத்தின் அடிப்படையில் ஒரு நாடு நிலைத்து நீடிக்கவில்லை என்பதே வரலாறு.
இந்து நாடு என பிரகடனம் செய்யப்பட்ட நேபாளம் அங்கு ஆட்சியிலிருந்த கொடுங்கோல் மன்னராட்சிக்கு எதிராக பல ஆண்டுகள் போராடி தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மதச்சார்பற்ற அரசாக இயங்கி வருகிறது. பல மொழி பேசக் கூடிய, பல பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட, பல மதங்களைக் கொண்ட மக்கள் இணக்கமாக வாழும் நாடு இந்தியா. இதனடிப்படையில்தான் அரசமைப்பு சட்டம் உருவானது. ஆனால், தற்போது இந்திய அரசமைப்புச் சட்டத்தினுடைய அடிப்படை விழுமியங்களான மதச்சார்பின்மை,