india

img

தண்ணீர் திருடினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை

குஜராத் மாநிலத்தில் தண்ணீரைத் திருடுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குஜராத் மாநில சட்டசபையில் குஜராத் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் (திருத்த) மசோதா 2019 மற்றும் குஜராத் உள்நாட்டு நீர் வழங்கல் (பாதுகாப்பு) மசோதா 2019 ஆகிய இரு மசோதாக்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன. அதில், கால்வாயில் இருந்து நீரைத் திருடினால்  3 முதல் 6 மாதங்கள் வரை சிறை தண்டனையும், கால்வாயை சேதப்படுத்தினால் 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். இதை அடுத்து,  தண்ணீர் குழாயை சேதப்படுத்தி நீர் திருடினால், 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தண்ணீர் குழாய்களின் வால்வுகளை சேதப்படுத்தினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறும்போது, கால்வாய்களிலிருந்து நீர் திருட்டுக்கு "தண்டனையையும் அபராதத்தையும் விதிக்கும்  மசோதா விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு எதிரானது என்றும் இது ஒரு "கறுப்புச் சட்டம்" என்றும் அது "பிரிட்டிஷாரை கூட வெட்கப்பட வைக்கும்" என்று தெரிவித்தனர்.
 

;