india

img

கண்களை கட்டிக் கொண்டு சைக்கிள் ஓட்டி சிறுவன் சாதனை

தஞ்சாவூர், ஆக.30- தேசிய விளையாட்டு தினத்தையொட்டி பட்டுக்கோட்டையில் வியாழக்கிழமை 2.6 கி.மீ தூரத்திற்கு கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டி 5 ஆம் வகுப்பு மாணவர் சாதனை செய்து அசத்தியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பொன்னவராயன்கோட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆனந்த், சித்திரவள்ளி தம்பதியினர். இவர்களது  மகன் ஆசிய்வ்(9) ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு உலக சாதனை முயற்சிக்காக ஆசிய்வ் இரண்டு கண்களையும் கட்டிக் கொண்டு, பட்டுக்கோட்டை நகரின் முக்கிய வீதியில் சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதை பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர்(பொ) ஆர்.ஜெயபால், சென்னை காவல் துணை ஆணையர்(ஓய்வு) சி.பாஸ்கர், கால்பந்து முன்னாள் விளையாட்டு வீரர் நல்லதம்பி ஆகியோர் முன்னிலையில், பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர், கணேசமூர்த்தி தொடங்கி வைத்தார். கண்களை கட்டியபடி சைக்கிளை ஓட்டி மாணவன் வெற்றிக்கரமாக நிறைவு செய்தான். 2.600 கிமீ தூரத்தை 17 நிமிடம்11 நொடிகளில் கடந்து ஆசிய்வ் சாதனை படைத்துள்ளான். இதைத்தொடர்ந்து மாணவனின் முயற்சியை பொதுமக்களும், பல்வேறு அமைப்பினர்களும் பாராட்டினர். முன்னதாக வழக்கறிஞர் ஆர்.ஜெயவீரபாண்டியன் வரவேற்றார். முன்னாள் உடற்கல்வி இயக்குநர் டி.ரவிச்சந்தர் நன்றி கூறினார்.

;