india

img

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ஜனவரி 1 முதல் உயர்கிறது ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணம்

ஜனவரி 1 முதல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்கள் உயர உள்ளது.

Maharashtra tops in ATM frauds, Delhi, Tamil Nadu, Karnataka follow |  Business Standard News

வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்-களில் ஒரு மாதத்துக்கு 5 முறை கட்டணமின்றி, பரிவர்த்தனை மற்றும் பணம் எடுத்துக் கொள்ளும் முறை இருந்து வருகின்றது. மற்ற வங்கி ஏடிஎம்களில் என்றால் மாநகரங்களில் 3 முறை கட்டணமில்லாமல்  பயன்படுத்தலாம்.

மற்றப் பகுதிகளில் 5 முறை பயன்படுத்த கட்டணமில்லை. இந்த வரம்பை தாண்டி தங்கள் வங்கிகளின் ஏடிஎம்-களில் பணம் எடுத்தால் தற்போது 20 ரூபாயும், மற்ற வங்கி ஏடிஎம்களின் பரிவர்த்தனைக்கு ஜி.எஸ்.டி. உடன் 23.6 ரூபாய் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.

கட்டணங்கள் அதிகரிப்பு

ஜனவரி 1, 2022ல் இருந்து இந்த கட்டணத்தினை உயர்த்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்துள்ளது.

அதன்படி, இலவச பரிவர்த்தனைகளை தாண்டி பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்குமான கட்டணம் 20 ரூபாயில் இருந்து 21 ரூபாயாகவும், மற்ற ஏடிஎம்களை பயன்படுத்தினால், ஜிஎஸ்டி-யுடன் சேர்த்து ரூ.25 ஆக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.டி.எம். கட்டணம் உயர்கிறது -வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை

ஏற்கனவே ஹெச்.டிஎஃப்.சி வங்கி மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகள் கட்டணத்தினை அதிகரித்துள்ளன. இந்த நிலையில் ஜனவரி 1ல் இருந்து மற்ற வங்கிகளும் இந்த கட்டணத்தினை உயர்த்த இருக்கிறது.

;