india

img

தொழிலாளர் விரோதப் போக்கில் ‘அமேசான்’

என் பெயர் நேஹா. எனக்கு வயது 25. நான் டெல்-4 என அழைக்கப்படும் குர்கான் மானேசரில் உள்ள அமேசான் கிடங்கில் பணியாளராக இருக்கிறேன். அமேசானுடனான எனது பயணம் 2022 ஆகஸ்ட் மாதம்  தொடங்கியது. நான் பணியில் சேரும் போது ​​எனது கடின உழைப்பு, ஒப்பந்தம் முறையாகப் புதுப்பிக்கப்படும், பதவி உயர்வுகள் உள்ளிட்ட அனைத்துச் சலுகைகளும் கிடைக்கும் என நம்பினேன். ஆனால் வேலை நிலைமையின் “யதார்த்தம்” எனது நம்பிக்கைக்கு விடை கொடுத்தது. என்னிடம் இருந்த நம்பிக்கை மறைந்து போனது.

10 மணி நேரம் நிற்கும் நிலை

அமேசான் கொடுத்த வெறும் ஆறு மணி நேரப் பயிற்சிக்குப் பிறகு, நான் ஒரு கடினமான வேலையில் அமர்த்தப்பட்டேன். மின் விசிறி இல்லாமல் பத்து மணி  நேரம் தொடர்ந்து நிற்கவேண்டும்.  ஒரு மணி நேரத்திற்கு குறைந்தது 240 பொருட்களை  வாடிக்கையாளர்களு க்கு பேக் செய்ய வேண்டும். கடினமான வேலையால் உடல் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டது.  தொடர்ந்து நிற்பதால்  தலைச்சுற்றலால் பாதிக்கப்பட்டு சோர்வடைகிறேன். 

அமேசானில் மனிதாபிமானமற்ற நிலைமை தான் உள்ளது.  தங்குமிடமோ, எங்களது நல்வாழ்வு குறித்தோ கவலை கொள்ள மாட்டார்கள். ஆனால், எவ்வளவு வேகமாக வேலை வாங்க வேண்டுமோ, அவ்வளவு வேகமாக வேலை வாங்குவார்கள். அமே சான் நிறுவனம் எங்கள் பணியை (செயல்திறனை) வெறித்தனமாக கண்காணிக்கிறது. பத்து மணி  நேரத்திற்குள்  கொடுக்கப்பட்ட பணியை முடிக்க இயலாத தருணங்களில் நாங்கள் தண்டனையை எதிர்கொள்கிறோம்.

கடும் கண்காணிப்பு

இடைவேளை நேரங்களில் நாங்கள் என்ன செய்கிறோம் என்பதைக் கூட கடுமையாக கண்காணிக் கிறார்கள். இது மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. 

ஓய்வெடுப்பதற்கு என்று தனி இடமில்லை. உணவு இடைவேளையின் போது ஓய்வெடுப்ப தற்காக கழிவறைகளையோ, அல்லது பொருட்கள் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் அறைகளையோ (லாக்கர்)  தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இப்படி ஓய்வெடுக்கும் போது சிக்கிக்கொண்டால் கண்டிக்கப்படுவோம்.  

கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் கடுமை யான வெயிலுக்கு மத்தியில் ஒரு மின்விசிறியாவது போட்டுத் தாருங்கள் என்ற மிகச் சிறிய கோரிக்கை யை மட்டுமே நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. இருப்பி னும் நாங்கள் பணியாற்றும் இடங்கள் வெப்பத்தால் தகிக்கின்றன.

ஒப்பந்தம் மீறும் நிறுவனம்

ஒன்றரை வருடங்கள் இத்தகைய நிலைமைக ளைத் தாங்கி பணியாற்றிய நான் விடுப்பு மறுக்கப்பட்டதால் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வேறுவழியின்றி இதே போன்ற பணியில் சேரும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். 

 நிர்வாகம் வெளிப்படையாக பேச மறுப்பது, சாத்தியமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர மறுப்பது போன்ற நடவடிக்கைகளால் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறுகிறது. 

 மறு நாள் வேலைக்கு வருவதை முதல் நாளே முன்பதிவு செய்ய வேண்டும்.  நிறுவனத்தின் இலக்கை பூர்த்தி செய்யும் நிலையிலும் தொடர்ச்சியான கண்கா ணிப்பு, அழுத்தம் எங்களது மோசமான வாழ்வாதா ரம் உடல் சோர்வை மறக்கடித்து விடுகிறது. நிர்வா கத்தின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு இடைவேளை யின்றி குடிக்க குடிநீர் கூட இல்லாமல் பணியாற்றுகிறோம்.

பணி நிரந்தரமில்லை... சொற்ப ஊதியம் தான்...

எந்த ஒரு தொழிலாளியும் பணி நிரந்தரம் செய்யப் படவில்லை, பல ஆண்டுகள் பணிபுரிந்தாலும். (டெல்-4) நிர்வாகம் தொழிலாளர் சட்டங்களையும் எங்கள் உரிமைகளையும் அப்பட்டமாக புறக்கணிக் கிறது. எங்களின் மாத ஊதியமோ வெறும் ரூ,10,088-தான்.  இந்த சொற்ப ஊதியத்தின் மூலம் அடிப்படை வாழ்க்கைச் செலவுகளைக் கூட ஈடுகட்ட முடியவில்லை. ஒரு குடும்பம் வாழ்வதற்கான ஊதியம் கொடுங்கள் என்று நாங்கள் பேசினால், ​​​​மீண்டும் பழிவாங்கலைச் சந்திக்கிறோம்.  

 எங்கள் கோரிக்கைகளுக்காக நான் அங்கம் வகிக்கும் அமேசான் இந்தியா தொழிலாளர் சங்கம்  போராடி வருகிறது. எட்டு மணி நேர வேலை, குறைந்த பட்ச சம்பளம் ரூ. 25,000, மனிதாபிமான வேலை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஊதியம், தொழி லாளர் சட்டங்களைப் பின்பற்ற வேண்டும். வேலைப் பாதுகாப்பு வேண்டும், உட்காருவதற்கு முறையான இருக்கை வசதிகள் செய்துதர வேண்டும், திருவிழாக் கால போனஸ் வழங்க வேண்டும், இந்திய தொழிலா ளர் சட்டங்களுக்கு நிர்வாகம் உட்பட வேண்டும்  ஆகியவை எங்கள் கோரிக்கைகளில் அடங்கும்.

எங்களது போராட்டம் வெறும் கூலி அல்லது வேலை நேரம் சார்ந்தது மட்டுமல்ல.  கண்ணியம் மற்றும் அடிப்படை மனித உரிமைகள் தொடர்பா னது. அமேசான் மற்றும் அதன் நிர்வாகம் எங்களது அவலநிலையை உணர்ந்து, எங்களது பணி நிலை மைகளை மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றத்திற்கான நேரமும் இதுதான் என்கிறார் நேஹா.

நிறுவனத்தின் மழுப்பல் பதில்

தொழிலாளர்களின் புகார்கள் குறித்து கேட்ட தற்கு அமேசான் செய்தித் தொடர்பாளர் சில குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவில்லை. ஆனால் “எங்கள் தொழிலாளர்களின் பாதுகாப்பும் அவர்க ளது நல்வாழ்வும் எங்களுக்கு மிகவும் முக்கியம். அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் குறிப்பிடத்தக்க வெப்பம் காணப்படுவதால், எங்கள் கட்டிடங்களில் ‘வெப்ப அழுத்தத்தை தடுக்கும்’ திட்டம் உருவாக்கப்பட்டுள் ளது. எங்கள் கட்டிடங்களுக்குள் மேம்படுத்தப்பட்ட காற்றோட்டம் மற்றும் ஏர் கண்டிஷனிங் வசதி செய் யப்பட்டுள்ளது. அனைத்து தொழிலாளர்களுக் கும் வெப்பத்தை தணிக்கும் திரவங்கள் வழங்கப்படு கின்றன. பல்வேறு தகவல்தொடர்பு வழிகளில் கல்வி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன” என்றார்.

ஓய்வெடுக்கக் கூடாது எனும் நிர்ப்பந்தம்

அமேசான் இந்தியா தொழிலாளர்கள் சங்கத் தின் ஒருங்கிணைப்பாளர் தர்மேந்திர குமார் கூறு கையில்,“வெப்ப அலை நிலைமைகளை மோசமாக்கி யுள்ளது. இலக்குகளை அடைய தொழிலாளர்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஓய்வு எடுக்கக் கூடாது என தொழிலாளர்கள் நிர்பந்திக்கப்ப டுகின்றனர்.  நிர்வாகம் கூறும் ஏர்கண்டிஷன் செய்யப் பட்ட பகுதிகள், பொருட்கள் ஏற்றும் பகுதிகள், ஸ்கேனிங் பகுதிகள் மற்றும் பேக்கிங் பகுதிகள் போன்ற பல்வேறு இடங்களிலிருந்து தொழிலாளர்கள்  தங்கள் நிலை மை குறித்தும் பணி நிலைமை குறித்தும் ஆதாரங்க ளை அனுப்பியுள்ளனர். தொழிலாளர்களின் பிரச்ச னைகள் தொடர்பாக அமேசான் நிறுவனத்திடமும்  தொழிலாளர் அமைச்சகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார். 

தொழிலாளர் அமைச்சகத்தின் செய்தித் தொடர் பாளர், இந்த விஷயம் குறித்து தங்களுக்குத் தெரி யாது. ஆனால் பிரச்சனைகள் குறித்து பரிசீலிக் கப்படும் என்றார்.

ஆதாரம் : தி வயர், இந்துஸ்தான் டைம்ஸ் தகவல்கள்





 

 

;