அமலாக்கத்துறையை மூலம் மிரட்டி தேர்தல் பத்திர திட்டத்தின் பல ஆயிரம் கோடி ரூபாய் வசூல் வேட்டை நடத்திய பிரதமர் மோடியின் தலைமையிலான பாஜக அரசின் பிரம் மாண்ட ஊழலை தனது நியாயமான விசா ரணை மூலம் அம்பலப்படுத்தியுள்ளார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட். இவரது உத்தரவால் பாஜகவும், பாரத ஸ்டேட் வங்கியும் கதிகலங்கி போயுள்ள நிலையில், தேர்தல் பத்திரம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடத்திய சந்திரசூட்டை சமூகவலைத் தளங்களில் நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். நீதிபதி சந்திரசூட்டின் புகைப்படத்துடன் “மனச்சாட்சி உள்ள நீதியரசர்” என்றெல்லாம் குறிப்பிட்டு மீம்ஸ் செய்து பதிவிட்டு வருகின்றனர். முக்கியமாக சில நெட்டிசன்கள் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் புகைப்படத்தை முகப்பு படமாக வைத்து அவருக்கு மரியாதை செய் துள்ளனர்.