புதுதில்லி, ஜன. 13 - நடப்பு 2023-24 நிதி யாண்டில், ஜனவரி 10 வரை ரூ. 14 லட்சத்து 70 ஆயிரம் கோடி நேரடி வரி வசூலாகி யுள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 19.41 சத விகிதம் அதிகம். எனினும் இது பட்ஜெட்டில் மதிப்பிடப் பட்ட நேரடி வரி வசூலில் 80.61 சதவிகிதம் மட்டுமே ஆகும். நேரடி வரி வசூ லில் பெருநிறுவன வரி, தனி நபர் வருமான வரி ஆகி யவையும் அடங்கியுள்ளன.