india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மாமல்லபுரத்தில் இயல்பு நிலை
சென்னை, டிச.7 - மிக்ஜம் புயல் தாக்கத்தால் மாமல்லபுரத்தில் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை  இன்றி மாமல்லபுரம் புராதன சின்னம்  பகுதிகள் வெறிச்சோடி காணப் பட்டது.

தற்போது அனைத்து வழித் தடங்களிலும் இருந்தும் பேருந்துகள் இயங்கி வருவதால் இயல்பு நிலை திரும்பி சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கி உள்ளனர். ஆனால் கடற்கரை கோவில் சாலை, ஐந்தூர தம், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டை கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வைத்திருந்த சாலையோர கடைகள் திறக்கப்பட்டன.

கடைகளின் உள்ளே மழையில்  நனைந்த தொப்பி, பொம்மை களை வியாபாரிகள் வெயிலில் காய வைத்து வருகின்றனர். பக்கிங் காம் கால்வாயில் தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கால்வாய் கரையோர தெருக்கள் மற்றும் அப்பகுதி கட்டிடங்கள் இன்னும் மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன.
 

ஹெலிகாப்டரில் உணவு விநியோகம்

சென்னை ,டிச.7 - மழை, வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்

குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ள னர். இவ்வாறு முடங்கி உள்ள மக்களுக்கு 16 இடங்களில் ஹெலி காப்டர் மூலம் உணவுப் பொட்ட லங்கள் வழங்கப்பட்டன. பொது மக்கள் வீட்டு மொட்டை மாடியில் காத்திருந்து அவற்றைப் பெற்றுச் சென்றனர்.

 இதுகுறித்து தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழ்நாடு அரசு சார்பில் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் மூலம் இந்த  உணவு விநியோகம் மேற்கொள்ளப் பட்டது” என்றார்.

சீரடைந்து வரும் கைப்பேசி சேவை
சென்னை, டிச.7 - சென்னையில் கைப்பேசி சேவை சீரடைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்தார்.

கடந்த மூன்று நாட்களாக சென்னை யில் கைப்பேசி சேவை மோச மடைந்திருந்தது. லட்சக்கணக்கா னோர் பிறரை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்தனர். தனியார் நிறுவனங்களும், ஒன்றிய அரசின்  தொலைத்தொடர்பு துறையில் சீரமைப்பு பணிகளை மேற்கொண் டுள்ளது. ஆனால், தற்போது கைப் பேசி சேவை ஓரளவுக்கு சீரடைந் துள்ளது. மிக விரைவில் அனைத்து  குறைபாடுகளும் நீக்கம் செய்து பொது மக்களுக்கு இணைய வசதிகளுடன் கைப்பேசி சேவையும் தொடரும் என்று தெரிவித்திருக்கிறார்.

போலி படங்கள் மூலம் வாட்ஸ் ஆப் மோசடி
தமிழ்நாட்டில், இந்த ஆண்டில் நடந்த அதிகபட்ச சைபர் குற்றங்கள் சென்னையில் தான் பதிவாகி இருப்பதாகவும், அடுத்த இடங்களில் தாம்பரம், ஆவடியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சைபர் குற்றங்கள் நடந்தால்  1930 தொலைபேசி எண்ணில்  அழைக்கும்படி தெரிவிக்கப்பட்டுள் ளது. அதன்படி சென்னை அசோக்  நகரில் 2,32,000 பேர் தமிழ்நாடு முழுவ தும் இருந்து புகார்களை பதிவு  செய்துள்ளனர். இதில் 30,000 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் புகார் அளித்தவர்கள் 6,500 பேர் சென்னையைச் சேர்ந்த வர்கள். சென்னைக்கு அடுத்தடுத்த இடங்களில் தாம்பரம் 3000 வழக்கு களுடன், ஆவடி 2,200 வழக்குகளு டன் உள்ளன.

சில மோசடியாளர்கள், வாட்ஸ்அப்  அடையாள படங்களை திருடி அதன் மூலம் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. புதிய செல்போன்  எண்களில் இருந்து அழைப்பு வரும் போது, வெறும் படங்களை வைத்து அந்த எண் அவர்களுடையது என யாரும் நம்ப வேண்டாம் என காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.