india

img

இந்திய மாணவர் சங்கத்தின் 54 ஆவது அமைப்பு தினம்

இந்திய மாணவர் சங்கத்தின் 54வது அமைப்பு தினம் சனிக்கிழமையன்று (டிச.30) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக சென்னை மாவட்டக்குழுக்கள் சார்பில் நடைபெற்ற பேரணி, கலைநிகழ்ச்சி, கருத்தரங்கு நிகழ்வு நடைபெற்றது. சங்கத்தின் அகில இந்திய தலைவர் வி.பி.ஷானு சங்கத்தின் கொடியேற்றி நிகழ்வுகளை தொடங்கி வைத்தார். அமைப்பின் மாநிலத் தலைவர் கோ.அரவிந்தசாமி, மத்தியக்குழு உறுப்பினர் எஸ்.மிருதுளா, மாநில துணைத் தலைவர் எஸ்.காவியா, துணைச் செயலாளர் ரா.பாரதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.