india

img

மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு அனுமதி....

புதுதில்லி;
அமெரிக்கா நாட்டின் தயாரிப்பான மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றைதடுக்க உலகம் முழுவதும் பல தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவில் தற்போதுபாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவாக்சின்’ தடுப்பூசி மற்றும் சீரம்இன்ஸ்டிட்யூட் உருவாக்கிய ‘கோவிஷீல்ட்’ ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக்’ ஆகிய தடுப்பூசிகளை செலுத்த ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.பல நாடுகளில் தயாரிக்கப் பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளும் இந்தியாவில் அனுமதி கேட்டுவிண்ணப்பம் செய்துள்ளன. சர்வதேச அளவில் உருவாக்கப்பட்ட ஃபைசர் மற்றும் மாடர்னா போன்றதடுப்பூசி நிறுவனங்களும் இந்தியபயன்பாட்டுக்கு அனுமதி கோரி யுள்ளன. 

ஃபைசர் மற்றும் மாடர்னா போன்ற தடுப்பூசிகளை அங்கீகரி ப்பதற்கான செயல்முறைகளை விரைவுபடுத்தியிருப்பதாக ஒன்றிய  சுகாதார அமைச்சகத்தின் கோவிட் பணிக்குழு தலைவர் வி.கே.பால் தெரிவித்திருந்தார்.இந்த தடுப்பூசியை பைசர், ஜெர்மன் நிறுவனமான பயோஎன்டெக் உடன் இணைந்து உருவாக்கியது. இது கொரோனா தொற்றை தடுப்பதில் 90 சதவீதத்திற்கும் அதிகமான செயல்திறனைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.இந்நிலையில் அமெரிக்க தயாரிப்பான மாடர்னா தடுப்பூசிக்குஒன்றிய  அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது இந்தியாவில் கொரோனாவுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட 4-வது தடுப்பூசி யாகும். இந்த தடுப்பூசியை இறக்குமதி செய்ய சிப்லா நிறுவனத்திற்கு  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாடர்னா அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் இருந்து இயங்குகிறது.  பெரும்பாலான தடுப்பு மருந்து இங்குதான் உற்பத்தி செய்யப்படும். மாடர்னா தடுப்பு மருந்து உடலில் செலுத்தப்பட்ட 95 சதவீதம்  பேருக்கு பலனளித்துள்ளது என்று கூறப்படுகிறது.
மாடர்னாவின் இரு டோஸ்கள் இடையே நான்கு வார கால (28 நாட்கள்) இடைவெளி இருக்க வேண்டும். மாடர்னா மருந்தை -20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில்ஆறு மாதங்கள் வரை சேமித்து வைக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

;