india

img

மூன்று ரயில்களில் 1000 கி.மீ பயணித்து விவசாயிகளை வாழ்த்த வந்த தயாபாய்....

புதுதில்லி:
தில்லியில் போராடும் விவசாயிகளுடன் தனது ஒருமைப்பாடை தெரிவிப்பதற்காக 3 ரயில்களில் பயணித்து ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மத்தியப் பிரதேசத்தின் தொலை தூர கிராமத்திலிருந்து தில்லிக்கு பயணம் செய்தவர் தயாபாய்.
மலையாளியும் சமூக ஆர்வலருமான அவரைப் பற்றி அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் விஜு கிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில் எழுதுகிறார். டிசம்பர் 11 அன்று பிரபல சமூக சேவகர்தயாபாயிடமிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்த போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நான் அவர்களை ஒரு முறைமட்டுமே பார்த்தேன்; அதுவும் ஒரு ரயில் பயணத்தில். பின்னர் நான் அவர்களைப் பற்றிசெய்தித்தாள்களில் நிறையப் படித்தேன், ஆனால் ஒருபோதும் தொடர்பு கொண்ட தில்லை.

யாரோ ஒருவரிடமிருந்து எனது தொலைபேசி எண்ணை பெற்று அழைத்தார். தில்லியில் நடக்கும் விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் ஆவேசம் கொண்ட அழைப்பு அது. அவர் தில்லிக்கு வர விரும்புவதாகக் கூறினார். விவசாயப் போராட்டத்திற்கு தனது ஒற்றுமையைக் காட்ட அவர்மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள பாருல் கிராமத்திலிருந்து தில்லிக்குபயணம் செய்தார். அவரது சொந்த வார்த்தைகளில், “ஒரு அற்புதமான எதிர்ப்பை உருவாக்கும் விவசாயிகளுக்கு நான் ஒரு வணக்கம்சொல்ல வந்திருக்கிறேன்.”அவர் மூன்று ரயில்களில் ஏறி தில்லியை அடைந்தார்.

நான் அகில இந்திய கிசான் சபாவின் அலுவலகத்திற்கு காலையில் சென்றேன். அந்தநீண்ட கடினமான பயணத்திற்குப் பிறகும், அவர் முற்றிலும் உற்சாகமாக இருந்தார். விரைவில் போராட்டக் களத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. கிசான் சபா அலுவலக பொறுப்பாளர்களுடன் ஒரு குறுகிய உரையாடலுக்குப் பிறகு, அவர் சிங்கு எல்லைக்கு புறப்பட்டார். பயணத்தின் போது, அவரது பல்வேறு வாழ்க்கை நிகழ்வுகள், எண்டோசல்பானில் பாதிக்கப்பட்டவர்களுடன் அவர் செய்த பணிகள், மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியின ரிடையே பணிபுரியும் போது அவர் சந்தித்த தாக்குதல்கள், அவர் நடித்த இரண்டு படங்கள்,வரவிருக்கும் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் என பலவற்றை விவரித்தார்.

பல போராட்டங்களில் நாயகியான இந்த 80 வயதானவர் கோவிட் பாதிப்பிலிருந்து மீண்டுநீண்ட நாட்கள் ஆகவில்லை. போராட்டக் களத்தை அடைந்ததும் அவர் தண்ணீரில் மீன் போல கூட்டத்தில் கரைந்தார். போராட்டக்காரர்களுடன் இரண்டு நாட்கள் கழித்த பின்னரேஅவர் திரும்பி செல்வார். மக்கள் கூட்டத்தைப் பார்த்ததும் அவரிடம் வெளிப்பட்ட ஆற்றலும், கண்ணில் வெளிப்பட்ட நம்பிக்கையும் இந்த போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவிக்க பலரையும் ஊக்குவிக்கும்.தான் விரும்பும் லட்சியத்துக்காக இது போன்று உறுதியாக நின்று போராடவும், தியாகங்கள் செய்யவும் துணிந்த தனிநபர்களின் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ள படிப்பினைகள் பல உள்ளன, என்று குறிப்பிட்டுள்ளார்.

;