india

img

பெரிய சிந்தனைகளைக் கொண்ட சீர்திருத்தம் மிக்க பட்ஜெட் இது... மோடி அரசைப் பாராட்டும் முதலாளிகள்....

புதுதில்லி:
மத்திய பாஜக அரசின் 2021-22 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, அனைத்துத் தரப்பினரும் எதிர்த்துவரும் நிலையில், தொழிலதிபர்கள் மட்டும் பாராட்டி வரவேற்றுள்ளனர்.

“இரண்டு பொதுத்துறை வங்கிகள் மற்றும்ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் முதலீடு தொடர்பானபல பெரிய சிந்தனைகளைக் கொண்ட சீர்திருத்தம் மிக்க பட்ஜெட்டை வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் வாழ்த்துக்கள். இந்த பட்ஜெட் உள்கட்டமைப்பு மீதான உந்துதல் வளர்ச்சியை அதிகரிக்கும்” என்று வேதாந்தா ரிசோர்சஸ் நிர்வாகத் தலைவர் அனில் அகர்வால் புளகாங்கிதம் அடைந்துள்ளார்.“கிரிக்கெட்டில் புஜாராவும் ரிஷப் பந்த்தும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்ததுபோல, நிலைத்தன்மையும் அதிரடியும் நிறைந்ததாக இந்த பட்ஜெட் உள்ளது. உள்கட்டமைப்பு, வணிகச் சட்டங்கள், காப்பீட்டில் அந்நிய நேரடி முதலீடு, பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களைப் பணமாக்குவதற்கான பெரிய முயற்சிகளில் வணிக எளிமையை உருவாக்கியுள்ளது” என்று ஆர்பிஜி எண்டர்பிரைசஸ் தலைவர் ஹர்ஷ் கோயங்கா பாராட்டியுள்ளார்.

“ஒட்டுமொத்தமாக, எதிர்மறையான அதிர்ச்சிகள் இல்லாத இந்த உறுதியான பட்ஜெட்ஒட்டுமொத்த உணர்வையும் தூண்டியுள்ளது” என்று பயோகான் நிர்வாகத் தலைவரான கிரண் மஜும்தார் ஷா என்பவரும் உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா மட்டும் சற்று நிதானமாக கருத்து தெரிவித்துள்ளார். “இந்த வரவு - செலவுத் திட்டத்தில் இருந்துஎனக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. நெருக்கடியான இந்தக் காலத்தில் பொருளாதாரத்தை புதுப்பிக்க போதுமான அளவு செலவழிக்க வேண்டும், இல்லையெனில் பெரும் மனித துன்பங்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் அது. மற்றபடி பட்ஜெட்டை வரவேற்கிறேன்” என்று ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளார்.

;