india

img

பிஎப் வட்டி மீது வரி.... ஒன்றிய அரசு புதிய உத்தரவு.....

புதுதில்லி:
வருமான வரி விதிகளை மேலும்சிக்கலாக்கி, அதன் மூலம் அதிகபட்ச தொழிலாளர்களிடமிருந்து வரி என்ற பெயரில் வருவாயை உறிஞ்சும் நோக்கத்துடன் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை இரண்டாக பிரிக்கு மாறு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய நேரடி வரிகள் வாரியம்,தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி(இபிஎப்) மீதான வரி தொடர்பான புதிய ஆலோசனைகளை முன்மொழி ந்தது. அதன்படி ஒன்றிய அரசு வருமான வரி (25வது திருத்த) சட்ட விதிகள் 2021ஐ நிறைவேற்றியுள்ளது.

இந்த சட்டவிதிகளை மத்திய நேரடி வரிகள் வாரி\யம் புதனன்று அறிவிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆண்டுக்கு ரூ.2.5லட்சத்திற்கு அதிகமாக ஊதியம் பெறும் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு மீது வரி விதிக்கப்படும். எனவே நிறுவனங்கள், தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதி கணக்குகளை வரி விதிப்புக்கு உட்பட்ட வருவாய் வரம்பு, வரி விதிப்புக்குஉட்படாத வருவாய் வரம்பு என இரண்டாக பிரிக்குமாறு ஒன்றிய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. இந்த உத்தரவு செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருவதாகவும் கூறியுள்ளது.ஆனால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்திற்கு, தொழிலாளர்களின் கணக்குகளை இப்படி இரண்டாகப் பிரிப்பது மிகப்பெரிய நிர்வாகச் சிக்கலும், துயரமும் மிகுந்த பிரச்சனையாக மாறும் என்று நிதித்துறைவல்லுநர்கள் கூறுகின்றனர். “வருங்கால வைப்பு நிதியின் மூலம் தொழிலாளர்களுக்கு கிடைக்கும்வட்டியின் மீது விதிக்கப்பட வேண்டியவரியை கணக்கீடு செய்யும் நோக்கத் திற்காக, 2021-22க்கு முந்தைய ஆண்டில் நடப்பில் உள்ள வருங்கால வைப்பு நிதி கணக்குகள் அனைத்தையும் வரி விதிக்கத்தக்க வட்டி பங்களிப்பு மற்றும் வரி விதிக்கத் தேவையில்லாத வட்டிப் பங்களிப்பு என்று ஒவ்வொரு நபரின் கணக்கையும் உடனடியாக பிரிக்கவேண்டும்” என்று வருமான வரி (25வது திருத்த) விதிகள் 2021 கூறுகிறது. இதன் காரணமாக அனைத்து வருங்கால வைப்பு நிதி கணக்குகளும் கட்டாயமாக பிரிக்கப்பட வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் 24.77 கோடி தொழிலாளர்களின் கணக்குகள் உள்ளன. இவற்றில் 2020 மார்ச் 31 விபரங்களின்படி 14.36 கோடி உறுப்பினர்களின் கணக்குகளுக்கு மட்டும்தான் ஆதார் அடையாள எண் இணைக்கப்பட்டுள்ளது. 2019-20 ஆம் ஆண்டின் வருங்கால

தொடர்ச்சி 3ம் பக்கம்

;