india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

பெகாசஸ் விவகாரத்தில் சத்தீஸ்கர் விசாரணை!

பெகாசஸ் மென்பொருள் மூலம் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வேவு பார்க்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்த சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல் உத்தரவிட்டுள்ளார். இதற்காக தனிப்படை ஒன்றையும் அவர் அமைத்துள்ளார். இவ்விவகாரத்தில் சத்தீஸ்கர் முன்னாள் பாஜக முதல்வர் ராமன் சிங்கும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாகேல் கேட்டுக் கொண்டுள்ளார்.

                                ***************

சித்து பதவியேற்பில் பங்கேற்ற அம்ரீந்தர்! 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து அண்மையில் நியமிக்கப்பட்டார். அவருடன் சங்கத் சிங் கில்சியான், சுக்வீந்தர் சிங் டேனி, பவன் கோயல், குல்ஜித் சிங் நக்ரா ஆகியோர் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், சித்து வெள்ளியன்று முறைப்படி காங்கிரஸ் அலுவலகத்தில் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்கும் கலந்து கொண்டு ஆச்சரியம் அளித்துள்ளார்.

                                ***************

நாட்டில் நிலவும் சூப்பர் எமர்ஜென்சி!

பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் 1972-இல் அமெரிக்காவை உலுக்கிய வாட்டர்கேட் ஊழலைவிட மிகப்பெரி யது. தற்போது, ஊடகங்கள் மீதான ஐடிரெய்டும் இணைந்துள் ளது. இது நாட்டில் ‘சூப்பர் எமர்ஜென்ஸி’ நிலையை உருவாக்கியுள்ளது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். “பிரதமர் மோடி என்னைச் சந்திக்க நேரம் கொடுத்துள்ளார். அடுத்த வாரம் தில்லி செல்கிறேன். அப்போது பிரதமரை நேருக்கு நேர் சந்திக்க இருக்கி றேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

                                ***************
உச்ச நீதிமன்றம் ஓடிய பாஜக எம்எல்ஏ-க்கள்!

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் அமளி யில் ஈடுபட்டதுடன், சபாநாயகர் பாஸ்கர் ஜாதவைத் தாக்க முயன்ற சம்பவம் கடந்த ஜூலை 5-ஆம் தேதி அரங்கேறியது. இதற்காக பாஜக எம்எல்ஏ-க்கள் 12 பேரை ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்து, சட்டப்பேர வையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் அவை நடவடிக்கையில் பங்கேற்க முடியாத பாஜக எம்எல்ஏ-க்கள், தங்கள் மீதான நடவடிக்கையை ரத்துசெய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

                                ***************

சிறுபான்மையினருக்கு எதிராக வழக்கு...

கேரளத்தில், இஸ்லாமியா்கள் மற் றும் கிறிஸ்தவா்களுக்கு இனிமேலும் தொடா்ந்து சிறுபான்மையினா் என்ற அந்தஸ்து அளிக்க வேண்டுமா? என்பது தொடா்பாக ஒன்றிய அரசு மறுபரிசீலிக்க உத்தரவிடக் கோரி, ‘ஜனநாயகம், சமதா்மம், பாலின சமத்துவம், மதச்சார்பின்மைக்கான குடிமக்கள் சங்கம்’ என்ற அமைப்பின் பெயரில் அங்குள்ள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் யார் சிறுபான்மையினா் என்பதை மறுஆய்வு செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

;