india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

பசுஞ்சாண பெயிண்டுக்கு தூதரான நிதின் கட்காரி

பசுமாட்டுச் சாணத் தில் தயாரிக்கப்பட்ட பெயிண்ட்டிற்கு, மத் திய அமைச்சர் நிதின் கட்காரி தன்னைத் தானே விளம்பரத் தூதுவராக அறிவித்துக் கொண்டுள்ளார். பசுஞ்சாணப் பெயிண்ட்டிற்கான தானியங்கி ஆலையை ஜெய்ப்பூரில் காணொலி மூலம் தொடங்கி வைத்தபோது, இந்தஅறிவிப்பை வெளியிட்டுள்ள அவர்,தனது நாக்பூர் வீட்டிற்கு பயன்படுத்துவதற்காக 1000 லிட்டர் பசுஞ்சாணப் பெயிண் டிற்கும் ஆர்டர் கொடுத்துள்ளார்.

                                 *****************

பாதை மாறிவிட்டது; நட்பு தொடர்கிறது!

பாஜக - சிவசேனாஉறவு குறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் விளக்கம் அளித்துள்ளார். அதில், அண் மையில் விவாகரத்து பெற்றுக்கொண்ட நடிகர் அமீர்கான் - கிரண் ராவ் ஆகியோரை ஒப்பிட்டு, “பாருங்கள், அமீர்கான் - கிரண்ராவ் பாதை மாறிவிட்டது. ஆனாலும் நண்பர்களாக உள்ளனர்” அதுபோலத்தான் இங்கும். பாதைகள் மாறிவிட்டன; ஆனால் நட்பு தொடருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

                                 *****************

உ.பி.யில் காங்கிரஸ்  தனித்துப் போட்டி!

அடுத்தாண்டு நடைபெறவுள்ள உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டி என்று சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் ஏற்கெனவே அறிவித்து விட்டன. இந் நிலையில், காங்கிரசின் நிலைப்பாடு குறித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லல்லு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “பிரியங்கா காந்தியின் மேற்பார்வையில், காங்கிரசும்தனித்துப் போட்டியிடும். 30 ஆண்டுகளுக்கு பிறகு உ.பி.யில் ஆட்சி அமைக்கும்” என்று கூறியுள்ளார்.

                                 *****************

பஞ்சாப்பை கெஜ்ரிவால் ஏமாற்ற முடியாது!

‘”பஞ்சாப்பில் ஆட்சிக்கு வந்தால், 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார். இந்நிலையில், கெஜ்ரிவால் என்னசெய்தாலும் பஞ்சாப் தேர்தலில் வெற்றிபெற முடியாது. தில்லி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையே அவர் நிறைவேற்றாமல் இருக்கிறார். தில்லி விவசாயிகளுக்கே இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை!” என்று பஞ்சாப்முதல்வர் அம்ரீந்தர் சிங் விமர்சித்துள்ளார்.

                                 *****************

மேகதாது அணையை கட்டியே தீருவோம்..!

“கர்நாடக மாநிலத்தில், காவிரி ஆற் றின் படுகையின் விவசாயிகளின் நலனுக் காக தமிழகத்துடன் தொடர்ந்து நாங்கள் சட்டப்போராட்டம் நடத்துவோம். இந்தச் சட்டப்போராட்டத்தில் நாங்கள் வெல்வோம் என்று நம்புகிறோம். நிச்சயமாக நாங்கள் காவிரியின் குறுக்கே மேகதாது திட்டத்தைச் செயல்படுத்துவோம்” என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

;