india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

ராஜீவ் காந்தி பெயரை அழித்துவிட முடியாது!

“பூங்காவின் பெயர் கள் மாற்றப்படுவதால் நவீன இந்தியாவை செதுக்கிய ராஜீவ்காந்தியின் பங்களிப்பை அழித்துவிட முடியாது. பெண் களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு, இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்க வாக்களிப்பதற்கான வயதை 21-லிருந்து 18 ஆக குறைத்தது ஆகியவற்றை  அழித்து ஒழிக்க முடியாது. வரலாற்றை மாற்றி எழுத, பாஜக தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் செல் போன்கள், கணினிகள் யாவும் ராஜீவ் காந்தி கொண்டுவந்த ஐடி புரட்சியினால் அவர்களுக்கு கிடைத்தவையே ஆகும்” என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

                                      **************

எம்எல்சி நியமனத்தில் ஆளுநர் பிடிவாதம்!

மகாராஷ்டிர சட்டமேலவைக்கு தனது ஒதுக்கீட்டில் வரும் 12 எம்எல்சி-க்களை நியமிக்காமல் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி 10 மாதமாக இழுத்தடிப்பு செய்து வருகிறார். இதுதொடர்பாக அவரை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, துணை முதல்வர்அஜித் பவார் உள்ளிட்டோர் வியாழனன்று நேரில் சந்தித்துப் பேசினர். இந் நிலையில், முதல்வரின் சந்திப்பிற்கு பிறகாவது ஆளுநர் முடிவெடுப்பார் என நம்புவோம் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

                                      **************

அரசியல் கலந்த  மதம் தேவையில்லை!

‘’ஆப்கானிஸ்தா னில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப் பற்றியிருப்பது உலகம் முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய முஸ்லிம்களில் சிலர்அந்த காட்டுமிராண்டி கும்பலை கொண்டாடுவது ஆபத்தானது. நான் ஒரு இந்திய முஸ்லிம். பல வருடங்களுக்கு முன்பு மிர்சா காலிப் கூறியதுபோல், என் கடவுளுடனான எனது உறவுமுறைசாராதது. எனக்கு அரசியல் கலந்தமதம் தேவையில்லை’’ என்று பாலிவுட்மூத்த நடிகர் நசீருதீன் ஷா தெரிவித் துள்ளார். 

                                      **************

பாதலுக்கு எதிராகவும் விவசாயிகள் போராட்டம்!

பஞ்சாப்பில் சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல்,யாத்திரை மேற்கொண் டுள்ள நிலையில், அவருக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர் செல்லும் பகுதிகளில் எல்லாம் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்புகின்றனர். அந்த வகையில், பாதல் வியாழனன்று மோகா மாவட்டம் தானா மண்டிக்கு வந்த நிலையில், அங்கும் விவசாயிகள் வாகனங்களை அடித்து நொறுக்கி போராட்டம் நடத்தியுள்ளனர். சுக்பீர் சிங் பாதல் ஓராண்டுக்குமுன்புவரை பாஜக கூட்டணியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

                                      **************

மத்தியப் பல்கலை.களில் புதிய கல்விக் கொள்கை!

நாடு முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுடன் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார். மத்தியப் பல்கலைக்கழகங்களில் நடப்புக் கல்வியாண்டிலேயே புதியதேசிய கல்விக் கொள்கையை அமல் படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

;