india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

குஜராத்திற்கு வந்தவர், மராட்டியம் வராதது ஏன்?

டவ்தே புயல் பாதித்த குஜராத் மாநிலத்தை, விமானம் மூலம் பார்வையிட்ட பிரதமர் மோடி, உடனடியாக ரூ.1000 கோடி நிவாரண உதவியும் அறிவித்தார். இந் நிலையில், குஜராத்தை போலவே அதிகபாதிப்பைக் கண்ட மகாராஷ்டிர மாநிலத்திற்கு பிரதமர் ஏன் வரவில்லை? என்று தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மாநில அமைச்சருமான நவாப் மாலிக் கேள்வி எழுப்பியுள்ளார். 

                              ***************

மே.வங்க ராஜ்பவன் முன்பு ஆடுகளுடன் போராட்டம்! 

மேற்குவங்க ஆளுநர் ஜகதீப் தன்கர், புதனன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி கொண்டிருந்த வேளையில், ஆளுநர் மாளிகையின் வடக்கு வாசல்முன்பு, ஒருவர் ஆட்டுமந்தையுடன் சென்று போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன், போலீசாரும் சுமார் 2 மணிநேரம் அந்தப் போராட்டத்தை வேடிக்கைபார்த்தது, ஆளுநரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதுதொடர்பாக மாநில டிபிஜியிடம் அவர் விளக் கம் கேட்டுள்ளார்.

                              ***************

உ.பி. பாஜக அரசு முதியவர் மீது வழக்கு!

உ.பி. மாநிலம், மெவ்லா கோபால்கர் கிராமத்தைச் சேர்ந்தவர், ஹர்வீர் தலன் (65). கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், வேப்பமரக் கிளைகளில் குளுக்கோஸ் பாட்டில்கள் தொங்க, மரத்தடியிலும் சிலருடன் சிகிச்சை எடுத்து வந்தார். தங்களுக்கு ‘முறைப்படி கொரோனா சிகிச்சைஅளிக்கப்படவில்லை’ என்று ஊடகத்தில்பேட்டியும் அளித்திருந்தார். இதற்காக ஆதித்யநாத் அரசு ஹர்வீர் மீது தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளது.

                              ***************

பாஜகவுக்கு கவலை சிங்கப்பூரை பற்றித்தான்!

‘சிங்கப்பூரில் உருவாகியுள்ள உருமாற்ற கொரோனா வைரஸால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என முதல்வர் கெஜ்ரிவால் கவலைப்படுகிறார். ஆனால், பாஜகசிங்கப்பூரைப் பற்றி கவலைப்படுகிறது’ என்று தில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா விமர்சித்துள்ளார். சிங்கப்பூர் பற்றி பேசுவதற்கு, தில்லி முதல்வர் இந்தியாவின் பிரதிநிதி அல்ல! என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருந்த நிலையில், சிசோடியா அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

                              ***************

ரூ.1,250 கோடிக்கு நிதியுதவி அறிவித்த எடியூரப்பா!

கொரோனா ஊரடங்கையொட்டி, கர் நாடக முதல்வர் எடியூரப்பா பல்வேறு தரப் பினருக்கும் நிதியுதவி அறிவித்துள்ளார். மலர், காய்கறிகள், பழங்கள் விளைவிக்கும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம், ஆட்டோ, வாடகைகார் ஓட்டுநர்கள், கலைஞர்கள், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம், அமைப்பு சாரா தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

;