india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்....

நாட்டின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த வங்கிகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடி அவசர நிதியாக வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

                          ***************  

நாடு முழுவதும் ஜூன் 7ஆம் தேதி நடைபெறவிருந்த 2021-22ஆம் கல்வியாண்டுக்கான தேசிய முதுநிலை ஆயுஷ் நுழைவு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

                          ***************  

அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் நடுநிலைப்பள்ளி களில் 5,146 தற்காலிக ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டவர்களின் பதவி காலத்தை மேலும் மூன்றுஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

                          ***************  

ஆதார் எண் இருந்தால் மட்டுமே மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் சமூக பாதுகாப்புத் திட்டங்களில் பயனடைய முடியும் என்று அத்துறை தெரிவித்துள்ளது.

                          ***************  

கொரோனா வைரஸை எதிர்த்துப் போரிடும், அதனைக் கட்டுப்படுத்தும் புதிய மனித மரபணுவை ஆய்வாளர்கள் கண்டறிந்து ள்ளனர். இதுகுறித்து சான்போர்ட் பர்ன்ஹாம் மருந்து கண்டுபிடிப்பு நிறுவனம் தனது இதழில் வெளியிட்டுள்ளது.

                          ***************  

மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு 8,000 லிட்டர் திரவ ஆக்சிஜன் வந்துள்ளது. 

                          ***************  

தமிழகத்தில் கொரோனா காரண மாக பயணிகள் எண்ணிக்கை குறைந்து காணப்படும் 50 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

;