india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்....

2021-22 கல்வியாண்டு முதல் எம்.பில் படிப்பு ரத்து செய்யப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

                                    ************

அண்ணாமலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு அடுத்த மாதம் ஜூலை 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

                                    ************

தமிழகத்தில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தொழிற்சாலை மற்றும் தாழ்வழுத்த வணிக மின் நுகர்வோரின் பயனீட்டு அளவைக் கணக்கீடு செய்து, அதற்கான தொகையை வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

                                    ************

பூமிக்கு மேல் 410 கிலோ மீட்டர் தொலைவில் சக்தி மிகுந்த சூரிய ஒளி தகடுகளை அமைத்து நாசா விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

                                    ************

அமெரிக்கா, தைவான் அரசுடன் ராணுவ ஒப்பந்தம் மேற்கொள்வது சீனாவுக்கு எதிராக போர்த் தொடுப்பதற்கு சமமாகும் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் அதன் செய்தித் தொடர்பாளர் ரென் குவாகியாங் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

                                    ************
ராணுவப் பணிக்கான பொது நுழைவுத் தேர்வில் கலந்து கொள்வோருக்கான தேர்வுக் கூட அனுமதிச் சீட்டை, ஜூலை 1 ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

;