india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீசை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு புதன்கிழமை உத்தரவிட்டார்.

                          ***************

புதிய டிஜிட்டல் சட்டங்களுக்கு இணங்குமாறு பேஸ்புக் மற்றும்கூகுள் நிறுவனங்களுக்கு தகவல்தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

                          ***************

நாகலாந்து  மாநிலத்தில் ஆயுதப்படைச் சட்டத்தை மேலும்6 மாதங்கள் நீட்டித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

                          ***************

மறைந்த பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள் ளார். வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குறைந்த வாடகையில் வீடு ஒதுக்கியும்  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

                          ***************

டிரோன்கள் எனும் ஆள் இல்லா விமானங்களை  கண்டுபிடித்துவீழ்த்தக்கூடிய புதிய தொழில்நுட் பத்தை கண்டுபிடித்திருப்பதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். துர்கா -2 டிரோன் எதிர்ப்புத் தொழில்நுட்பம் மூலம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் சிறிய டிரோன்களை அழிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

;