india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

போலி சான்றிதழ்களை சரிபார்க்காமல் பணி நியமனம் வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் செய்ய அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலிபள்ளி மாற்றுச்சான்றிதழ் சமர்ப்பித்த அரசு பேருந்து ஓட்டுநர் சீனிவாசனை பணி நீக்கம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                                   **************

நீதித்துறையில் இருப்பவர்களே நீதிமன்றத்தின் மீது கல் எறிந்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் சதீஷ்குமாருக்கு ஒருமாத சிறைதண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

                                   **************

சட்ட விரோதமாக நிலக்கரி சுரங்கம் தோண்டி வருவாய் ஈட்டியதாகமேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி ரூஜிரா ஆகியோர் ஆஜராக  அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.

                                   **************

அங்கீகரிக்கப்படாத டிஜிட்டல் கடன் வழங்கும் தளங்கள்/மொபைல் செயலிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.  ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்களுக்கு எதிரான புகார்களை http://cmc.rbi.org.in இல் பதிவு செய்யலாம்.

                                   **************

பிரிக்ஸ் நாடுகள் இடையே சுற்றுச்சூழல் குறித்த ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதற்கான புதுதில்லி தீர்மானத்தை இந்நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் ஏற்றுள்ளனர். 

                                   **************

உலகம் முழுவதும் அதிக கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்ட நகரங்களில், சென்னை மூன்றாமிடத்தை பிடித்துள்ளது.

                                   **************

ஒன்றிய அரசின் தேசிய குழந்தைகள் நலத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பு தரும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் ஒரு பொறுப்பாசிரியரை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

;