india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

எரிவாயு விலை உயர்வு: நிதிஷ் கட்சி எதிர்ப்பு

“சமையல் எரிவாயு விலை அடிக்கடி உயர்ந்துவருவதால், பொதுமக் கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே,சமையல் எரிவாயு விலை உயர்வை ஒன் றிய அரசு திரும்பப் பெற வேண்டும். அதுபோல், பெட்ரோல் - டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் பொறுப்பில் விட்டது சரியல்ல. மக்கள் நலனுக்காக பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த ஒன்றியஅரசு தலையிட வேண்டும்” என்று ஐக்கியஜனதாதளம் செய்தித் தொடர்பாளர் கே.சி. தியாகி கூறியுள்ளார்.

                            *************** 

ஆப்கானிஸ்தானாக இந்தியா மாறும்...!

“நாட்டில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரைபெண்கள் பாதுகாப் பாக இருப்பார்கள். அனைவருக்கும் சமவாய்ப்பு இருக்கும். டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பும் இருக்கும். மாறாக, இந்துக்கள் சிறுபான்மையினர் ஆனால், ஆப்கானிஸ்தானில் நடந்தது இங்கேயும் நடக்கும். அம்பேத்கரின் அரசியலமைப்பைப் பாதுகாக்க விரும்புவோர் இந்த உண்மையை மறந்துவிடக் கூடாது” என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி. ரவி முதலைக் கண்ணீர்வடித்துள்ளார்.

                            *************** 

சிலிண்டர் 884 ரூபாய்...  இதுதான் நல்ல காலமா?

“கடந்த 2014 மார்ச் 1 அன்று காங்கிரஸ் தலைமையிலான ஐக் கிய முற்போக்குக் கூட்டணி அரசில் சமையல்எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 410. ஆனால், 2021 செப்டம்பர் 1 அன்றுபாஜக தலைமையிலான தேஜகூ ஆட்சியில் அது ரூ. 884. கடந்த 7 ஆண்டுகளில் சிலிண்டர் விலை இரட்டிப்பாகியுள்ளது. இதுதான் மோடிஜியின் நல்ல காலம்வரும் (அச்சே தின்) என்ற வாக்குறுதியா?”என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

                            *************** 
காந்தி பற்றி அவதூறு நடிகை மீது வழக்கு!

மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர்கள் ஜவகர்லால் நேரு, இந் திரா காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் குறித்து நடிகைபாயல் ரோத்கி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதுதொடர்பாக, புனே நகர காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்திருந்தனர். அதன்பேரில், நடிகை பாயல் ரோத்கி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

                            *************** 

சீக்கியர்களிடம் மன்னிப்பு கேட்ட ஹரிஷ் ராவத்

பஞ்சாப் மாநில காங்கிரஸ் உட்கட்சி பூசல் தொடர்பாக, சித்து மற்றும் மூத்த நிர்வாகிகள் நான்கு பேருடன் அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் பேசினார். அப்போது, சித்து உள்ளிட்டோரை ‘பஞ்ச்பியாரே’ என குறிப்பிட்டார்.சீக்கியர்களின்வழக்கத்தில், இந்த வார்த்தை, மிகவும் புனிதமாக கருதப்படுவதால், ஹரிஷ் ராவத் திற்கு எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, ‘பஞ்ச் பியாரே’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக, ஹரிஷ் ராவத் மன்னிப்பு கேட்டுள்ளார். பரிகாரம் தேடும்வகையில், குருத்வாராவில் தூய்மை பணியில் ஈடுபடுவதாகவும் கூறியுள்ளார்.

;