india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

கர்நாடகா மாநிலம் கல்புர்கி ஜிம்ஸ்மருத்துவனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு படுக்கை வசதி கிடைக்காததால், ஆட்டோவில் வைத்து ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் செயற்கை சுவாசகருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப் பட்டது.

                                        ****************** 

கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளுக்கு மாநில அரசுகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படாது என்றுவடக்கு ரயில்வே பொது மேலாளர்அஷுதோஷ் கங்கால் தெரிவித்துள் ளார்.

                                        ****************** 

கொரோனா பரவல் அதிகரிப்பின் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1400 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்தது.

                                        ****************** 

அனைத்து தடுப்பூசி மையங்களிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவுண்டர்கள் அமைத்து முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                                        ****************** 

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வுநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

                                        ****************** 

சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், சென்னையில் உள்ள அரசுமருத்துவமனைகளில் கூடுதல் செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

                                        ****************** 

கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சைஅளிக்கும் வகையில் தில்லி, ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலுள்ள மருத்துவமனைகளுக்கு இலவச ஆக்சிஜன் சிலிண்டர் வழங்க இந்தியன் ஆயில் நிறுவனம் முன் வந்துள்ளது.

                                        ****************** 

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டிருந்த இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள் ளது.

                                        ****************** 

திருச்சி பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால், தடுப்பூசிசெலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

                                        ****************** 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்களன்று 97.54  அடியாக குறைந்தது.

                                        ****************** 

லக்னொவில் 30 சதவீதத்திற்கும் அதிகமான சுகாதார ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

                                        ****************** 

மாநிலங்களுக்கு ஆக்சிஜன் வழங்குவதில் மத்திய அரசு பாகுபாடு காட்டுவதாக ராஜஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சர் ரகு சர்மா குற்றம்சாட்டியுள்ளார்.

                                        ****************** 

கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து நேபாளத்தில் நகர்ப்புறங்களில்  உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களை யும் மே 14 வரை மூட அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

                                        ****************** 

நாட்டில் கொரோனா பரவல்அதிகரித்து வரும் நிலையில்,செவ்வாய்க்கிழமை முதல் மே 3-ஆம்தேதி வரை இந்தியாவுடனான அனைத்து விமான சேவையையும் ஹாங்காங் ரத்து செய்துள்ளது.

;