india

img

தனியாருக்கு கொடுத்த தடுப்பூசிகளை திரும்பப் பெற்ற பஞ்சாப் அரசு.... மத்திய அரசின் புகாரால் அம்ரீந்தர் சிங் அதிரடி....

சண்டிகர்:
பஞ்சாப் அரசானது, கொரோனா தடுப்பூசிகளை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக மத்திய அமைச்சர் குற்றம் சாட்டியிருந்த நிலையில், முதல்வர் அம்ரீந்தர் சிங் தடாலடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டிருந்த தடுப்பூசிகள் அனைத்தையும் உடனடியாக திரும்பப்பெறுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச் சர் அம்ரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில், பஞ்சாப் அரசானது, கொரோனாவுக்கான 1.40 லட்சம் டோஸ் ‘கோவாக்சின்’ தடுப்பூசிகளை டோஸ் ஒன்றுக்கு400 ரூபாய்க்கு கொள்முதல் செய்து,அதனை 20 தனியார் மருத்துவமனைக்கு ஒரு டோஸ் 1,060 ரூபாய் என்ற விலைக்கு விற்று, கொள்ளை லாபம் பார்ப்பதாக மத்திய அமைச்சர்பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டியிருந்தார்.

பஞ்சாப்பின் முக்கிய எதிர்க்கட்சியான சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதலும், 400 ரூபாய்க்கு வாங்கிய தடுப்பூசியை, காங்கிரஸ் அரசு தனியார் மருத்துவமனைகளுக்கு 1,060 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது; தனியார் மருத்துவமனைகள் அதனை 1,500 ரூபாய்க்கு மக்களுக்கு போடுகின்றன என்று கூறியிருந்தார்.இந்நிலையில்தான், தனியார் மருத்துவமனைகளுக்கு மாநில அரசு சார்பில் விநியோகம் செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை உடனடியாக திரும்பப் பெறுமாறும், அவர்களிடம் பெற்ற தொகையை அந்தந்த மருத்துவமனைகளுக்கு திருப்பி அளித்து விடுமாறும் பஞ்சாப் முதல்வர்அம்ரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

;