india

img

கொரோனா பரவலுக்கு பிரதமர் மோடியே காரணம்..... இந்திய மருத்துவ சங்கத் துணைத்தலைவர் நவ்ஜோத் தாஹியா பகிரங்க குற்றச்சாட்டு....

புதுதில்லி:
இந்தியாவில் வேகமாக பரவும்கொரோனா தொற்றின் 2-ஆவது அலைக்கு கடந்த 24 மணி நேரத்தில்மட்டும் 2,771 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 3 லட்சத்து 23 ஆயிரத்து 144 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமையுடன் நாட்டில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை (கடந்த ஓராண்டில்) 2 லட்சத்தை எட்டியுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும்அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘இந்தியாவில் கொரோனா தொற்று, இவ்வளவு வேகமாகப் பரவுவதற்கு பிரதமர் நரேந்திர மோடியும், அவர் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களும்தான் காரணம்!’ என்று இந்தியமருத்துவ சங்கத்தின் (Indian Medical Association - IMA)துணைத்தலைவர் டாக்டர் நவ்ஜோத் தாஹியாகுற்றம் சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக, ‘தி டிரிப்யூன்’ (The Tribune) ஏட்டிற்கு பேட்டி அளித்துள்ள தாஹியா, மேலும் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் தொற்றின்முதல் நோயாளி இந்தியாவில் 2020ஜனவரியில் கண்டுபிடிக்கப்பட்டபோது, பிரதமர் நரேந்திர மோடி,தொற்றுநோயைச் சமாளிப்பதற்கானஏற்பாடுகளைச் செய்வதற்குப் பதிலாக, குஜராத்தில் ஒரு லட்சத்துக்கும்மேற்பட்ட மக்களைக் கூட்டி, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பை வரவேற்றார்.அதன் பிறகும்கூட, கொரோனா தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை உச்சம் பெறாத - கடந்த ஓராண்டு காலத்தில், மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்த அவர்எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தில்லி எல் லையில் குவிந்து, கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அப்போதும் பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பான முறையில் செயல்படவில்லை. விவசாயிகளின் கோரிக்கைகளை பேசித் தீர்த்து, அவர்கள் ஒரே இடத்தில் கூடுவதை தடுப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக, அவர்கள் பெரும் எண்ணிக்கையில் கூடுவதை அனுமதித்தார்.

கடைசியாக தொற்றின் 2-ஆவதுஅலை ஏற்பட்ட நேரத்தில், கொரோனாதடுப்புக்கான கட்டாய நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என மக்களுக்குப் புரியவைக்க மருத்துவ சகோதரர்கள் கடுமையாக போராடிக் கொண்டிருந்தனர். ஆனால், பிரதமர் மோடியோ, அந்த நேரத்தில் நாடு முழுவதும் பிரம்மாண்ட தேர்தல் பொதுக்கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார். கொரோனா பாதுகாப்பு தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் காற்றில் தூக்கி வீசினார்.

ரசியல் உரையாற்றுவதற்கு அவர் கொஞ்சமும் தயங்கவில்லை. மேற்கு வங்கத்தில் சில வாரங்களுக்கு முன்புகூட மோடியின் தேர்தல்பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். தேர்தல் கூட்டங்களைநடத்திக் கொண்டே, லட்சக்கணக்கானோர் கூடிய கும்ப மேளாவுக்கும் அவர் அனுமதி கொடுத்தார்.இதன்மூலம் நாட்டில் கொரோனாபரவுவதற்கு பிரதமர் மோடியே மிகமுக்கியமான காரணமாகி விட்டார். மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்த பிரதமர் எந்த நடவடிக்கையும்எடுக்காததால் முழு சுகாதார முறையும் இன்று தோல்வி அடைந்துள்ளது. இந்தியாவில் தொற்றுநோய் நெருக்கடியைக் கையாள்வதில் பிரதமர் மோடியும், அவரது அரசும் முற்றிலும் தோல்வி அடைந்து விட்டதாகசர்வதேச ஊடகங்கள் விமர்சித்தன. அதுவும் பிரதமர் காதில் விழவில்லை.கொடிய வைரசின் தீவிரத் தன்மைகுறித்தும், அது பரவுவதை சமாளிக்கவும் மோடி தலைமையிலான மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆக்சிஜன் ஆலைகளை நிறுவுவதற்கான பல திட்டங்களுக்கே கூட, மோடி அரசு அனுமதிவழங்காமல் கிடப்பில் வைத்தது. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பலநோயாளிகள் இறப்பதற்கு இன்றுமருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறைதான் முக்கியக் காரணமாகி இருக்கிறது.

தொடர்ந்து அதிகரித்து வரும்கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும், நாட்டின் ஒவ்வொரு நகரத்திலும் உள்ள மருத்துவமனைகளுக்கு வெளியே ஆம்புலன்சுகள் நீண்ட வரிசையில் நிற்பதும், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பல நோயாளிகள் உயிரிழந்து கொண்டிருப்பதும் கொரோனா தொற்றுப் பரவலின் தீவிரத்திற்கான வெளிப்படையான சாட்சிகளாக மாறியிருக்கின்றன. இதற்கான காரணமாக மோடி இருக்கிறார்.இவ்வாறு டாக்டர் நவ்ஜோத் தாஹியா விமர்சித்துள்ளார்.

;