மக்களவைத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தல்களும் வேறுபட்டவை. 2018இல் ராஜஸ்தான், மத்தியப்பிரதேச சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றியடைந்தது. ஆனால் 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக அமைந்தது. அதனால் மாநில சட்டமன்றத் தேர்தல்களை மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக கருத இயலாது.