india

img

அமைச்சகங்கள் 20 சதவிகிதம் செலவைக் குறைக்க வேண்டும்... ஒன்றிய நிதியமைச்சகம் திடீர் உத்தரவு...

புதுதில்லி:
ஒன்றிய அமைச்சகங்களின்  செயல்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் சுமார்20 சதவிகிதத்தை மிச்சப்படுத்த வேண்டும்என்று ஒன்றிய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ஜூலை 1 முதல் துவங்கும் நிதியாண்டின்2-ஆவது காலாண்டுக்கு இந்த அறிவுறுத் தல் பொருந்தும் என்று கூறியுள்ள ஒன்றியநிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரப் பிரிவு, எனினும் சுகாதாரம், விவசாயம்,குடிநீர் உள்ளிட்ட சில அத்தியாவசிய சேவைத்துறைகளுக்கு மட்டும் இந்த சிக்கன நடவடிக்கையில் இருந்து விலக்கு தரப்படுவதாக தெரிவித்துள்ளது.ஓய்வூதியம், வட்டி, மாநிலங்களுக்கான நிதியை அளித்தல் போன்ற நடவடிக்கைகள் இந்த அறிவுறுத்தலின் கீழ் வராது என்றும் நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.கொரோனா தடுப்புச் செலவுகள், இலவச தடுப்பூசி, பொது முடக்கங்களால் வரிவருவாய் குறைந்து ஒன்றிய அரசு கடந்த ஓராண்டுக்கு மேலாக கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதால் சிக்கன நடவடிக்கையை அறிவித்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டின் கடன் கடந்த மார்ச் நிலவரப்படி 116 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

;