tamilnadu

இறக்குமதி பிளாஸ்டிக் மூலப்பொருட்களுக்கு சுங்க வரியை குறைக்க வேண்டும் மத்திய அரசுக்கு பிளாஸ்டிக் சங்கத்தினர் வலியுறுத்தல்

சென்னை, ஜன. 20- இறக்குமதியாகும் பிளாஸ்டிக் மூலப்பொருட்களுக்கு சுங்க வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசை தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்கத்தின் தலைவர் ஜி.சங்கரன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பிரதமரிடம் வழங்கி யுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் உள்ள பிளாஸ்டிக் தொழிலில் ஆரம்பத்தில் பல வெளி நாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டினர். ஆனால் பல்வேறு காரணங்களினால், 30  வருடங்கள் ஆன பின்னும், எந்த ஒரு வெளிநாட்டு நிறுவனமும், பெரிய அளவில் முதலீடு செய்து, மூலப் பொருருள் தயாரிக்கும் நிறுவனங்களை இந்தியாவில் தொடங்கவில்லை. சில பொதுத்துறை நிறுவனங்களும், ஒரே ஒரு தனியார் நிறுவனம் மட்டும்தான், பெரிய அளவில் முதலீடு செய்து ஆரம் பித்துள்ளனர். 1991க்கு முன்பு பிளாஸ் டிக் துறை கோட்டா சிஸ்டத்தில்தான் இருந்து வந்தது. இதைத் தவிர்க்கத் தான் 1991 முதல் இன்று வரை மத்திய அரசில் இருந்த பல்வேறு அரசுகளும் சிறு, குறு நிறுவனங்கள் பிரிமீயம் கொடுக்காமல், கள்ள சந்தை மார்க்கட்டை தடுக்க, மூலப்பொருள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஆனால் மத்திய அரசின் முயற்சிகள் இன்றுவரை போதிய பலன்களை தரவில்லை. இன்றளவும் பல்லாயிரக்கணக்கான சிறு, குறு பிளாஸ்டிக் நிறுவனங்களுக்கு தேவைப் படும், மூலப்பொருள் கிடைப்பது பெரிய பிரச்னையாகத்தான் உள்ளது. மூலப்பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்தும், தங்க ளுக்குள் ஒன்று சேர்ந்து ஒரு கார்டெல் போன்ற அமைப்பை உருவாக்கி, இந்தியாவில் எப்பொழுதும் மூலப்பொருட்கள் தட்டுப்பாடான அளவிலேயே கிடைக்கும்படி பார்த்துக் கொள்கின்றனர். இதைப் போன்ற சூழ்நிலையில் தற்போது வெளியிட உள்ள (2020-20) மத்திய நிதி நிலை அறிக்கையில் சிறு, குறு பிளாஸ்டிக் நிறுவனங்கள் மேலும் பாதிக்கும் வகை யில் சில முடிவுகளை வெளியிட மூலப் பொருள் தயாரிக்கும் பெரிய நிறுவனங் கள் மத்திய அரசில் முயற்சி செய்கின்றனர் என கேள்விப்படுகி றோம். முதலாவதாக தற்போது உள்ள மூலப்பொருட்களுக்கான சுங்க வரியை மேலும் 5 விழுக்காடு உயர்த்த முயற்சி செய்கின்றனர். சுங்க வரி இந்தியாவில் குறைவாக இருப்பதால், வெளிநாட்டில் இருந்து அதிகளவில் மூலப்பொருட்கள் இறக்குமதி ஆகின்றன. அதனால் உள்நாட்டு நிறுவனங்களுக்கு, வியாபாரம் பாதித்துள்ளதாகவும், அதனால் உள்நாட்டு நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் மூலப்பொருட்கள் விற்பனையாகாமல் இருப்பதாகவும் கூறுகின்றனர். மேலும் இதன் காரண மாகத்தான் வெளிநாட்டு நிறுவனங் களுக்கு கட்டுபடியாகாத சூழ்நிலை நிலவுவதால், இந்தியாவில் வந்து புதிதாக மூலப்பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் துவங்கவில்லை என்றும் கூறுகின்றனர். இவை அனைத்தும் உண்மைக்கு புறம்பான காரணங்கள் ஆகும். உண்மையில் உள்நாட்டு பெரிய நிறுவனங்கள், அவர்கள் தயாரிக்கும் மூலப்பொருட்களில் 35 விழுக்காட் டிற்கு மேல், வெளிநாட்டில் விலை குறை வாக இருந்தாலும் உள்நாட்டில் செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்க தாங்கள் தயாரிக்கும் மூலப் பொருட்களை ஏற்றுமதி செய்கின்றனர். மூலப்பொருட்கள் சர்வதேச சந்தை விலைக்கு இந்தியாவில் கிடைக்காத காரணத்தினால்தான், உள்நாட்டு சிறு, குறு நிறுவனங்கள் வெளிநாடுகளைப் போல் போதிய வளர்ச்சி அடையாம லும், வெளிநாடுகளுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றுமதி செய்ய முடியாமல் உள்ளனர். மத்திய அரசு தற்போது சுங்க வரியை, மேலும் உயர்த்தினால், இன்ஸ்பெக்டர் ராஜ் காலத்தில் இருந்த தைப் போன்ற மீண்டும் கோட்டா சிஸ்ட மும், அதிகமான அளவில் கள்ள சந்தை யும் உருவாகத்தான் வழிவகுக்கும். மேலும் சிறு, குறு நிறுவனங்கள் காலத்திற்கேற்ப சமதளப்போட்டியில் தொழில் செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால், பெரிய நிறுவனங்கள் போட்டியின்றி அதிக லாபம் சம்பாதிக்க அவர்களுக்கு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்வது, மக்கள் நல அரசுக்கு உகந்த செயல் அல்ல என்று நினைக்கிறோம். இறக்குமதியாகும் பிளாஸ்டிக் மூலப்பொருட்களுக்கு சுங்க வரியை உயர்த்துவதும் மற்றும் தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிப்பதும், பல்வேறு காரணங்களினால் ஏற்கனவே வென்ட்டிலேட்டரில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறு, குறு நிறுவனங்களின், செயல்பாடுகளை மீண்டும் உயிர்த்தெழ முடியாக நிலைக்கு தள்ளிவிடும் என்று நினைக்கி றோம். ஆகவே, மத்திய அரசு சிறு, குறு நிறுவனங்களின் நலனை மனதில் கொண்டு, தற்போது உள்ள சுங்க வரியை ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த 5 விழுக்காடு அளவுக்கு குறைத்தும், தேவையற்ற கட்டுப்பாடுகளை தவிர்த்தும், தக்க அறிவிப்புகளை மத்திய பட்ஜெட்டில் தெரிவித்து, சிறு, குறு பிளாஸ்டிக் நிறுவனங்களை வாழ வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

;