india

img

கேரளம் மேய்ச்சல் காடு அல்ல.... அரசின் திட்டங்களை அழிப்பதே ஏஜென்சிகளின் நோக்கம்.... பிரதமருக்கு கடிதம் அனுப்புவதாக முதல்வர் தகவல்....

கண்ணூர்:
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பித்தாலும் அரசின் திட்டங்களை நாசப்படுத்துவதே மத்திய புலனாய்வு முகமைகளின் நோக்கம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். புலனாய்வு நிறுவனங்கள் தங்கள் பொறுப்புகளிலிருந்து விலகிச் செல்கின்றன. இதை மாநில அரசு தீவிரமாக எடுத்துக் கொள்கிறது. இவற்றை விளக்கி பிரதமருக்கு கடிதம் சமர்ப்பிப்பதாக கேரள முதல்வர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். 

மத்திய ஏஜென்சிகள் கேரளாவில் மேய முடியாது. இது அரசின் குறிப்பிட்ட அரசியல் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். மத்திய ஏஜென்சிகளால் ஆட்சியைத் தகர்த்தெறிந்ததற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அகமது படேல் முதல் சிதம்பரம் வரை பல காங்கிரஸ் தலைவர்கள் அமலாக்க இயக்குநரகத்தால் வேட்டையாடிய பட்டியலில் உள்ளனர். விசாரணையின் ஒரு பகுதியாக அரசியல் எதிரிகளை துன்புறுத்தும் நிலையை ஏஜென்சிகள் எடுத்துள்ளன. கோடியைக் கொடுத்து அரசாங்கம் தூக்கியெறியப்படும் போது, எந்த விசாரணையும் இல்லை. ஊழல்வாதிகள் மீது வழக்குத் தாக்கல் செய்வது பாசாங்குத்தனம் என்றும், ஊழல்வாதிகள் பாஜகவில் சேர்ந்தால் வழக்கு கைவிடப்படும் என்றும் முதல்வர் கூறினார்.

விசாரணை முகமைகள் குறித்து தொடக்கத்தில் எதிர்ப்பு எதுவும் இல்லை. ஆனால் விசாரணை முன்னேறும்போது, குறிக்கோள் தெளிவாகியது. விசாரணையின் கீழ் உள்ள உண்மைகளை சரிபார்க்க வேண்டும்என்பதே அவர்களின் வேலை. ஆனால் இன்று நாம் காணும் விஷயம் என்னவென்றால், மத்திய அரசும் யுடிஎப்பும் ஒரே திசையில் நகர்கின்றன. காங்கிரஸை வாங்குவதே பாஜகவின் உத்தி என்று முதல்வர் கூறினார்.

கோவிட் தடுப்பூசி இலவசம்
கோவிட் தடுப்பூசி கேரள மக்களுக்குஇலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.தடுப்பூசி எந்த அளவுக்கு கிடைக்கும்என்பது கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம். ஆனால் இங்கு கொடுக்கப்படும் அனைத்து தடுப்பூசிகளும் இலவசம். தடுப்பூசிக்கு அரசாங்கம் யாரிடமும் கட்டணம் வசூலிப்பதில்லை. இது குறித்து எந்த சந்தேகமும் தேவையில்லை என்று முதல்வர் கூறினார். 

;