புதுதில்லி, டிச. 4- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடா் தொடங்கிய நிலையில், இந்திய தபால் அலு வலக சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவை யில் நிறைவேற்றியது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடா் இரு அவைகளிலும் திங்களன்று தொடங்கியது. மக்களவையின் தொடக்க நிகழ்வாக சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல் குறிப்புகளை வாசித்தார். அதன்பிறகு பகுஜன் சமாஜ் எம்பி டேனிஷ் அலியின் போராட்டம் காரணமாக மக்களவை ஒரு மணிநேரம் அதாவது 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பிறகு திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீதான நெறிமுறைக் குழு அறிக்கை தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விவாதம் மேற்கொண்டார். தொடர்ந்து மஹுவா மொய்த்ராவும் தனது கருத்துக்களை தெரி வித்தார். பின்னர் வழக்கறிஞர்கள் (திருத்தம்) மசோதா 2023 பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
மாநிலங்களவை
மாநிலங்களவையில் 50 சதவீத பெண் எம்.பி.க்களுடன் 8 பேர் கொண்ட துணைத் தலைவர்கள் குழு மீண்டும் அமைக்கப் பட்டது. தொடர்ந்து 125 ஆண்டுகள் பழமையான இந்திய தபால் அலுவலக சட்டத்தை திருத்து வதற்கான தபால் அலுவலக மசோதா 2023 நிறைவேற்றப்பட்டது. மழைக்கால கூட்டத்தொட ரில் இடைநீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதா மீதான உத்தரவை மாநிலங்களவை சபாநாயகர் ஜெகதீப் தன்கர் ரத்து செய்வதாக அறிவித்தார்.