india

img

தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சமாக குறைந்தது.... மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்....

புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா தொற்றுகடந்த 2 மாதங்களில் இல்லாத அளவு1,00,636 ஆக குறைந்துள்ளது. சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையும் 14,01,609 ஆக சரிவடைந்துள்ளது.

கொரோனா 2 ஆவது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. கடந்த 2 மாதங்களுக்குப் பிறகு தினசரி கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,00,636 ஆகஉள்ளது. கடந்த 24 மணி கொரோனா நிலவரம்குறித்த புள்ளிவிவரங்களை மத்திய  சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன்படி இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,89,09,975. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,00,636. இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,71,59,180. கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,74,399.கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,49,186. கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2427. சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 14,01,609. இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கை 23,27,86,482. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள தகவல்படி இந்தியாவில் இதுவரை 36,63,34,111பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 15,87,589பேருக்கு பரிசோதனை செய்யப் பட்டுள்ளது.

;