india

img

நாட்டின் வேலையின்மை விகிதம் மீண்டும் அதிகரிப்பு.... இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 15 லட்சம் பேர் வேலையிழப்பு....

புதுதில்லி:
இந்தியாவில், கடந்த ஆகஸ்ட் மாதம்மட்டும் 15 லட்சம் பேர் வேலையிழந்திருப்பதாக, இந்தியப் பொருளாதாரக் கண் காணிப்பு மையம் (Centre for MonitoringIndian Economy - CMIE) கூறியுள்ளது.

கிராமப்புறம், நகர்ப்புறம் என பாகுபாடின்றி, நாடு முழுவதும் பரவலாகஇந்த வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சிஎம்ஐஇ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.2021 ஜூலை மாதம் பணியில் இருந் தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 993 லட்சத்து 80 ஆயிரமாக (சுமார் 39 கோடியே 93 லட்சம்) இருந்தது. அது ஆகஸ்ட் மாதத்தில் 3 ஆயிரத்து 977 லட்சத்து 80 ஆயிரமாக(39 கோடியே 77 லட்சம்) குறைந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் மட்டும் சுமார் 15 லட்சம் பேர் பணி இழந்துள்ளனர். நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை ஜூலை மாதத்தில் 8.3 சதவிகிதமாக இருந்தநிலையில் ஆகஸ்ட் மாதத்தில் 9.78 சதவிகிதமாகவும், கிராமப்புற வேலைவாய்ப் பின்மை, ஜூலை மாதத்தில் 6.34 சதவிகிதமாக இருந்தது, ஆகஸ்ட் மாதத்தில் 7.64 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது.கொரோனா இரண்டாம் அலை பரவலுக்கு முன்பு நகர்ப்புற வேலைஇன்மை 7.27 சதவிகிதமாக இருந்தது. அது ஏப்ரல் மாதம் 9.78 சதவிகிதமாக உயர்ந்து மே மாதம் 14.73 சதவிகிதம் ஆனது. பின்னர் ஜூன் மாதம் 10.07 சதவிகிதம், ஜூலை மாதம் 8.3 சதவிகிதம் என்று குறைந்தது. ஆனால், ஆகஸ்ட் மாதத்தில் 9.78 சதவிகிதமாக மீண்டும் உயர்ந்துள்ளது.ஒட்டுமொத்தமாக, 2021 ஜூலை மாதத்தில் 6.95 சதவிகிதமாக இருந்த வேலையின்மை, ஆகஸ்ட் மாதத்தில் 8.32 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த 2021 மே(14.73 சதவிகிதம்), ஜூன் (10.07 சதவிகிதம்) மாதங்களை ஒப்பிடும்போது இதுசற்றே குறைவுதான் என்றாலும், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 8 மாநிலங்களில் தற்போதும் வேலையின்மை விகிதம் இரட்டை இலக்கத்தில்தான் உள்ளது என்று பொருளாதாரக் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

;