india

img

கடவுளின் சூப்பர் கம்ப்யூட்டர்தான் கொரோனாவை உருவாக்கியது..... அசாம் பாஜக அமைச்சர் கண்டுபிடிப்பு....

கவுகாத்தி:
கொரோனா தொற்றுப் பாதிப் புக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க உலகமே போராடிக் கொண்டிருந்த வேளையில், மாட்டின் சிறுநீரான கோமியத்தை கொரோனாவுக்கு மருந்தாக பரிந்துரைத்து, பாஜகதலைவர்கள் செய்த கோமாளித் தனங்களை ஒருபோதும் மறக்க முடியாது.

இந்து மகாசபையின் தலைவர்சாமியார் சக்கரபாணி, ‘டீ பார்ட்டி போல’, தில்லியில் ‘கோமியம் பார்ட்டி’ நடத்தினார். அப்போது இந்து மகா சபையினர், மாட்டின்சிறுநீர் நிரப்பப்பட்ட குவளைகளுக்கு பூஜை நடத்தி, பின்னர் அவற்றை கையில் எடுத்து வைத்துக்கொண்டு, ‘கொரோனா வராது.. கொரோனா வராது’ என கோஷம் போட்டபடியே, ஒரே மூச்சில் குடித்துக் காட்டினர்.“நாம் ஒரு நாட்டுப் பசுவின் கோமியத்தை குடித்தால், அது நம் நுரையீரலில் ஏற்படும் தொற்றுநோய் களைக் குணப்படுத்துகிறது” என்றுபாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குர்பேசினார். “தான் தொடர்ந்து கோமியம் குடிப்பதால், கொரோனாவுக்கு கூட எனக்கு மருந்து தேவைப்படாமல் போய் விட்டது” என்று அவர்கதைவிட்டார். உத்தரப் பிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்திரா சிங்,கோமியத்தை எந்த விகிதத்தில் தண்ணீருடன் கலந்து குடிப்பது என்று செய்முறை விளக்கம் அளித்து வீடியோவே வெளியிட்டார்.

‘கோ கொரோனா’ (Go Corona) ‘கோ கொரோனா’ (Go Corona) எனஆங்கிலத்தில் மூன்றுமுறை சொன்னால் கொரோனா ஓடி விடும் என்று ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத் வாலே காமெடி செய்தார். பிரதமர் மோடி தட்டுக்களைத் தட்டி ஒலி எழுப்பச் சொன்னதுடன், வீட்டு மாடிகளில் குத்து விளக்கேற்றுமாறு கேட்டுக் கொண்டார்.“கொரோனா வைரஸ் காற்றில் பரவக் கூடிய தொற்று நோய் என்பதால், அதையும் மாட்டுச் சாணம், கோமியம் மூலம் சரிசெய்ய முடியும்”என்று அசாம் மாநிலம், ஹஜோ தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருந்த சுமன் ஹரிபிரியா கூறினார். “தனக்கு இந்த உண்மையைக் கூறியதே அமைச்சராக (தற்போது முதல்வர்) இருக்கும் ஹிமந்தா பிஸ்வா சர்மாதான்” என்றும் காட்டிக் கொடுத்தார்.இந்நிலையில்தான், ஹிமந்தாபிஸ்வா சர்மாவின் அமைச்சரவையில் இருக்கும் சந்திரமோகன் படோவாரி “கொரோனா வைரஸை உருவாக்கியது யார்?” என்று உலகமே எழுப்பும் கேள்விக்கு விடை கூறியுள்ளார்.“கொரோனா வைரஸ் என்ற கொடுந்தொற்று மனிதனால் உரு
வாக்கப்பட்டதல்ல; அது கடவுளின்சூப்பர் கம்யூட்டர் உருவாக்கியது” என்று படோவாரி தெரிவித்துள்ளார். கொரோனா யாரை பாதிக்க வேண்டும் என்பதையும் அந்த கம்யூட்டர் தான் முடிவு செய்கிறது” என்றும்அவர் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளார்.

;