india

img

பெண் காவலர்களை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் மீது பழிசுமத்த சதி.... மோடி அரசு மீது மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு....

புதுதில்லி:
பெண் காவலர்களைப் பயன்படுத்தி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது பழிபோடுவதற்கான சதித்திட்டத்தை மோடி அரசு நாடாளுமன்றத்தில் கையாண்டதாக காங்கிரஸ் மூத்தத் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத் துள்ளார்.

இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் மல்லிகார்ஜூன கார்கே மேலும் கூறியிருப்பதாவது:

ஆகஸ்டு 11 அன்று, இதர பிற் படுத்தப்பட்டோர் யார்? என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்கும் மசோதாவை நிறைவேற்றிய பின்னர் மாநிலங்களவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது, திடீரென 40-50 பாதுகாவலர்கள் அவைக்குள் வரவழைக்கப்பட்டனர். அவா்களில் பெண் பாதுகாவலர்களும் இருந்தனர். அவர்கள் அவையில் பாதுகாப்பு அரண் ஒன்றை ஏற்படுத்தினர். வழக்கமாக அவையில் இடையூறு, வன்முறை ஏற்படும்போதுதான் பாதுகாவலர்கள் வரவழைக் கப்படுவார்கள்.ஆனால் அன்றைய நாளில் காப் பீட்டு சட்டத்திருத்த மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக பாதுகாவலர்கள் வரவழைக் கப்பட்டனர். அவா்களின் பாதுகாப்புடனே அந்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.ஆனால், மசோதா தொடா்பான விவாதத்தின்போது அமளி ஏற்பட்டு தவறுதலாக பெண் பாதுகாவலர்களை எதிர்க்கட்சி எம்.பி.க்கள்தொட்டிருந்தால் அதற்கு அவா்கள் மீது பழிசுமத்தி குற்றச்சாட்டுகளை புனைவது என ஒன்றிய அரசு திட் டமிட்டிருந்தது. இதற்காகவே ஆண் பாதுகாவலர்களை வரவழைப்பதற்கு முன்பு பெண் பாதுகாவலர்களை வரவழைத்தது. நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் தமக்கு பெரும் பான்மை உள்ளதால் ஒன்றிய அரசுஎதேச்சதிகாரமாகவும் வலுக்கட்டாயமாகவும் தனது செயல்திட்டங் களை நிறைவேற்ற விரும்புகிறது. நாடாளுமன்றம் செயல்பட முடியாமல் போனதற்கு ஒன்றிய அரசுதான்காரணம். இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.

;